ஈரான் எல்லையில் நிலநடுக்கம்: பலி 400 ஆக உயர்வு
![ஈரான் எல்லையில் நிலநடுக்கம்: பலி 400 ஆக உயர்வு ஈரான் எல்லையில் நிலநடுக்கம்: பலி 400 ஆக உயர்வு](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2017/11/14/121107-638293-iran700.jpg?itok=jP7CK2yU)
ஈரான் மற்றும் ஈராக் எல்லைப்பகுதியான கெர்மன்ஷா மாகாணத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது.
ஈரான் மற்றும் ஈராக் எல்லைப்பகுதியான கெர்மன்ஷா மாகாணத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஒன்று திரண்டனர். சில கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தன.
அந்த வகையில் தற்போது வரை பலியானோர் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது. 70,000 பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கமானது பாகிஸ்தான், ஈரான், குவைத், துபாய், இஸ்ரேல் என பல நாடுகளையும் அதிரவைத்தது.