ஒமிக்ரான் வைரஸை தடுக்க 4-வது பூஸ்டர் டோஸ் !
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவின் மாறுபாடான ஓமிக்ரான் வைரஸை தடுக்க மக்களுக்கு 4-வது பூஸ்டர் டோஸை செலுத்த ஜெர்மனி அறிவித்துள்ளது, மேலும் இதனை பிரிட்டனும் பின்பற்ற இருப்பதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் மற்றும் ஜெர்மனியை நடுங்க வைத்துள்ள கொரோனா வைரஸின் மாறுபாடான ஓமிக்ரான் வைரசின் தாக்குதலிலிருந்து மக்களை காக்க நான்காவது பூஸ்டர் தடுப்பூசியை வெளியிடுவதாக அந்நாட்டு அரசுகள் அறிவித்து இருக்கிறது. மேலும் பிரிட்டனிலும் இந்த வைரஸின் பாதிப்பு அதிகரித்து வருவதால் அந்நாடும் நான்காவது பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது பற்றி கலந்தாலோசித்து வருகிறது.
ALSO READ | Corona New variant: கோவிட் நோய் அதிகரிப்பதற்கு காரணம் ஒமிக்ரானா இல்லை டெல்மிக்ரானா?
ஜெர்மனியின் சுகாதார அமைச்சர் கார்ல் லாடேர்பட்ச் கூறுகையில் நான்காவது பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் தான் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பை எதிர்த்து மக்கள் போராடலாம் என்று கூறியுள்ளார். பயோஎன்டெக் நிறுவனத்திடமிருந்து மில்லியன் கணக்கான ஓமிக்ரான் தடுப்பூசிகளை நாடு ஆர்டர் செய்துள்ளது. இருப்பினும், ஏப்ரல் அல்லது மே வரை டெலிவரி நடைபெறாது என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மாடர்னா தடுப்பூசி பூஸ்டர் மார்க்கெட்டிங் பிரச்சாரத்தில் பயன்படுத்தப்படுகிறது, மேலும் ஜெர்மனி 4 மில்லியன் டோஸ் நோவாவாக்ஸ்(Novavax) தடுப்பூசியையும், 11 மில்லியன் வால்வெனா(Valvena) ஆர்டர் செய்துள்ளது, இவை விரைவில் சந்தைப்படுத்த தயாராகி வருகிறது.
கடந்த புதன்கிழமையன்று ஜெர்மனி அறிக்கையின்படி, 45,659 பேர் புதிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்பு இருந்ததை விட 5,642 குறைவு, அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 510 ஆக உயர்ந்தது. ஜெர்மனி மற்றும் இஸ்ரேலின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து, தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான குழுவும் (JCVI) இரண்டாவது செட் பூஸ்டர்களை வெளியிடுவது குறித்து ஆலோசித்து வருகிறது. கடந்த புதன்கிழமையன்று மட்டும் முதல் முறையாக 100,000 க்கும் மேற்பட்ட புதிய தினசரி நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உள்ளதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
ALSO READ | மனிதர் புரிந்துக் கொள்ள இது மனிதக்காதல் அல்ல, பெண் மீது டால்பின் கொண்ட காதல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR