லிமா: தெற்கு பெருவில் ஏற்பட்ட 5.5 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கத்தினால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்துள்ளன என்று தகவல்கள் வெளியாகிள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெரு மற்றும் பொலிவியா நாடுகளுக்கு இடையிலான டிட்டிக்காக்கா ஏரியின் ஓரத்தில் பெருவிலுள்ள ஆன்டெஸ் மாகாணத்தின் ஜுலியாக்கா நகரில் இருந்து சுமார் 77 கிலோமீட்டர் தூரத்தில், பூமிக்கு அடியில் சுமார் 3.5 கிலோமீட்டர் ஆழத்தில், உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 10.40 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  


நேற்றிரவு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பீதியடைந்த ஜுலியாக்கா நகர மக்கள் தங்களது வீடுகளை விட்டு கூச்சலிட்டபடி ஓடிச்சென்று தெருக்களில் தஞ்சம் அடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அருகாமையில் உள்ள லாம்பா மாகாணம் மற்றும் ஜுலியாக்கா நகரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்து கிடப்பதாகவும் அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.