பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்
புவியல் அமைப்பின்படி நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா மற்றும் சாலமன் தீவுகளில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
வெலிங்டன்: புவியல் அமைப்பின்படி நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா மற்றும் சாலமன் தீவுகளில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
பப்புவா நியூ கினியாவின் ஆர்வா என்ற பகுதியில் பூமிக்கு அடியில் சுமார் 167 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 7.9 அலகுகளாக பதிவாகியுள்ளது.
இன்றைய நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி எச்சரிக்கை ஏதும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் சுனாமி தாக்கலாம் என்ற பீதியில் இந்த தீவுகளில் வாழும் மக்கள் உறைந்துள்ளனர்.