வேற்று கிரகவாசிகள் குறித்து அவ்வப்போது பல வகையான சுவாரசியமான தகவல்கள் வெளியாகும். வேற்று கிரக வாசிகள் இருக்கிறார்களா இல்லையா என்பது குறித்து ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். சாமானிய மக்களிடையேயும் இது குறித்து பல கேள்விகளும் சந்தேகங்களும் அதிகம் உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பூமிக்கு வந்து உளவு பார்க்கும் வேற்று கிரகவாசிகள்


ஏலியன்கள் என்று அழைக்கப்படும் வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டில் பூமிக்கு வந்து உளவு பார்க்கிறார்கள் என்று ஒரு கருத்து உண்டு. அவர்கள் தொழில்நுட்பத்தில் மிகவும் சிறந்து விளங்குபவர்கள் என்றும், மனிதர்களை விட பல்வேறு வகையில் மேம்பட்டவர்கள் என்றும் கூறுவது உண்டு. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இது வரை கொடுக்கப்படவில்லை. வேற்றுகிரக வாசிகள் குறித்து பல திரைப்படங்கள் வெளியாகி வரவேற்பையும் பெற்றுள்ளன. அவற்றில் வேற்று கிரக வாசிகள் தொடர்பான தகவல்களை கற்பனைகளுடன் இணைத்து மிகவும் சுவாரஸ்யமாக படம் எடுத்திருப்பார்கள்.


வேற்று கிரகவாசியை கண்ணால் பார்த்த பிரிட்டன் பெண்


அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் UFO எனப்படும் பறக்கும் மர்ம பொருள் காணப்பட்டதாக பல முறை கூறப்படும் நிலையில், பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் வேற்று கிரகவாசியை தான் பார்த்ததாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு வேற்று கிரகவாசி தனது சகோதரனை வீட்டிற்குள் துரத்தியதாக ஆஷ்லே பிக் என்ற பெண் கூறியுள்ளார்.


படுக்கை அறையில் தெரிந்த கருப்பு நிழல்


வட கரோலினாவின் ரிச்லேண்ட்ஸில் உள்ள ஆஷ்லே தனது படுக்கை அறையில் ஒரு கருப்பு உருவம் அடிக்கடி தென்பட்டு வந்ததாக கூறினார். முதலில் அது தன் மனதில் இருக்கும் பிரமை என்று நினைத்த அவர், அதற்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்து விட்டார். ஆனால் வீட்டில் உள்ள பிறரும் கருப்பு உருவம் தென்பட்டதாக கூறியதை அடுத்து அது உண்மை என்று உணர்ந்தார்.


வீட்டின் பின்புறத்தில் காணப்பட்ட விசித்திரமான பந்துகள்


ஒரு நாள் ஆஷ்லே எத்தனை வீட்டின் பின்புறத்தில் இருந்த நீச்சல் குளத்தில் பாலிய நண்பியுடன் குளித்துக் கொண்டிருந்தபோது விசித்திரமான பந்து ஒன்றைக் கண்டதாக கூறுகிறார். அந்தப் பந்து தரையில் இருந்து சுமார் 15 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்ததோடு, அதில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டு இருந்ததாக கூறுகிறார். 


மேலும் படிக்க | வடகொரியாவின் கொடூரமான தொழிலாளர் முகாம்கள்: தப்பி பிழைக்க வாய்ப்பே இல்லை


நெருக்கமாக வந்த முக்கோண வடிவ UFO


ஆஷ்லி அவர் அம்மாவை அழைத்து விஷயத்தை கூறியதும், முதலில் இவர்கள் உளறுவதாக நினைத்தார். ஆனால் அம்மா வந்ததும் அவர்கள் ஒரு பிரகாசமான ஒளியை பார்த்தார்கள். அவர்களை நோக்கி நெருங்கி வந்த அந்த ஒளி முக்கோண வடிவில் இருந்தது. இதைப் பார்த்ததும் பதறிய அவரது அன்னை, ஆஷ்லியையும் அவர் தோழியையும் உள்ள இழுத்துச் சென்றார். இறுதியாக சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு UFO காணாமல் போனது. 


சகோதரனை தொடர்ந்த கருப்பு நிழல்


இனி பயம் இல்லை என்று இருந்தபோது, ஆஸ்லியின் சகோதரன், தனது அறையில் கருப்பு நிழல் தெரிவதாகவும் அது தன்னை பின் தொடர்வதாகவும் அலறியபோது, இவர்கள் அனைவரும் ஓடிச் சென்று பார்த்தனர். அந்தக் கருப்பு நிழல் சென்று விட்டது. இந்த நிகழ்வு அவர்களுக்குள் பெரும் பயத்தை உருவாக்கியதாக அச்சத்துடன் இந்த சம்பவத்தை விவரித்தார் ஆஷ்லே.


மேலும் படிக்க |  Air Strikes:பழிக்கு பழி! ராணுவத்தினரின் உயிரிழப்புக்கு பதிலடி கொடுக்கும் அமெரிக்காவின் தாக்குதல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ