இஸ்லாமிய நாடான அபுதாபியில் பிரம்மாண்ட ஹிந்து கோயில் கட்டப்பட்டுள்ளது. அபுதாபியை துபாயுடன் இணைக்கும் ஷேக் சையத் நெடுஞ்சாலையில், சுமார் 27 ஏக்கர் நிலப்பரப்பில் இந்து கோயில் கட்டப்பட்டுள்ளது. அபுதாபியில் திறக்கப்படும் முதல் கோவிலான இதனை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைக்க உள்ளார். பிப்ரவரி 14ம் தேதி இந்த கோவில் திறந்து வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அபுதாபியின் முதல் இந்து கோவிலை கட்ட சுமார் 800 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக ஊடக செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதில் உள்ள சிற்ப வேறுபாடுகள், நுணுக்கமான கைவினை திறன்கள், ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட மணல் கற்களால் ஆன கலை வேலைப்பாடுகள், பளிங்கு கற்களால் ஆன வேலைப்பாடுகள் என 27 ஏக்கர் நிலப்பரப்பில் பரவி இருக்கும் இந்து கோவில் மிகப்பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.


பளிங்கு கற்களால் ஆன இந்த கோவில், நுண்ணிய வேலைப்பாடுகள் நிறைந்த தூண்களை கொண்டுள்ளது. இதில் ஸ்ரீராமர், விநாயகப் பெருமான், ஐயப்பன் உள்ளிட்ட இந்து தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளன. ராஜஸ்தானில் உள்ள கைவினை கலைஞர்களின் கலைத்திறனை இந்தக் கோவிலில் காணலாம். தலைமுறை தலைமுறையாக சிற்பங்களை செதுக்கி வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் செதுக்கிய சிலைகள் அபுதாபியில் உள்ள இந்து கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. கோவிலில் உள்ள எண்ணற்ற  சிற்பங்கள், கலைஞர்களின் கைத்திறனுக்கு சான்றாக உள்ளது.


அபுதாபி ஒரு பாலைவன தேசம். அங்கே கடும் வெப்ப காலத்தில் சுமார் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும். இந்த வெப்பத்தை தாங்கும் வகையில், ராஜஸ்தானில் இருந்து மணல் கற்கள் கொண்டு செல்லப்பட்டு, அதை கொண்டு கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு இத்தாலியில் இருந்து கொண்டு வரப்பட்ட பளிங்கு கற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.


ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏழு நாடுகள் உள்ளன. அதைக் குறிக்கும் வகையில் ஏழு கோபுரங்கள் இந்த கோவிலில் உள்ளன. இது தவிர குவி மாடங்களும் எண்ணற்ற தூண்களும் உள்ளன. தூண்களில் ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை, சிவபுராணம் ஆகியவற்றின் கதைகளை விவரிக்கும் காட்சிகள் தத்ரூபமாக சிற்பங்களில் செதுக்கப்பட்டுள்ளன.


மேலும் படிக்க | இந்தியாவுடன் நெருங்கும் அண்டை நாடு! சீனாவிற்கு கடுப்பேற்றும் இலங்கை அரசியல்வாதிகள்!


கோவிலில் உட்புறம் சுமார் 40,000 கன அடி பளிங்கு கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவில் கட்டுமானத்திற்காக 700 க்கும் அதிகமான கண்டெய்னர்களில் இந்தியாவிலிருந்து கற்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.


ஐக்கிய அமீரகத்தில் கணிசமான அளவுக்கு இந்தியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் சுமார் 1,200க்கும் மேற்பட்ட இந்து கோயில்களை நிறுவி வரும் பாப்ஸ் (BAPS ) அமைப்பு அபுதாபி கோயிலை கட்டி வருகிறது. அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம், அபுதாபி கோயிலின் படங்களைப் பகிர்ந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரியில் அபுதாபி கோயில் கட்டுமானப் பணியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.


ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் 35 லட்சம் இந்தியர்கள் இக்கோயில் திறக்கப்படும் தினத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். ஐக்கிய அமீரக அரசு, கோயில் கட்டுமானத்திற்கான சுமார் 17 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியது. இதற்காக ஐக்கிய அமீரக அரசுக்கு பிரதமர் மோடி ஏற்கெனவே நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Grammy: கிராமி விருது வென்ற SHAKTI ஆல்பம்! இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்த சங்கர் மகாதேவன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ