காபூல்: சனிக்கிழமை (ஆகஸ்ட் 22, 2020) ஆஃப்கானிஸ்தானின் (Afganistan) தலைநகரமான காபூல் (Kabul) மூன்று IED குண்டு வெடிப்புகளால் (IED Blast) ஆடிப்போனது. இந்த பயங்கரவாத தாக்குதலில் ஒரு பாதுகாப்பு படை வீரர் கொல்லப்பட்டார். ஒரு சிவிலியன் உட்பட நால்வருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காபூல் பொலிஸ் அறிக்கையை மேற்கோள் காட்டிய டோலோ நியூசின் படி, முதல் குண்டுவெடிப்பு காபூலின் PD 5 (போலீஸ் மாவட்டம் 5) இல் உள்ள சரக்-இ-நவ் பகுதியில் நடந்தது.


இந்த குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படையின் ஒரு உறுப்பினர் கொல்லப்பட்டார். ஒரு சிவிலியன் உட்பட இருவர் காயமடைந்தனர்.


இரண்டாவது குண்டுவெடிப்பு காபூலின் PD15 இல் உள்ள ஹங்கர்ஹா ரவுண்டானாவில் காலை 7:20 மணியளவில் நடந்தது. இதில் இரண்டு போலீசார் காயமடைந்தனர்.


ALSO READ: ‘இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுத போரை நடத்துவோம்’ இந்தியாவை மீண்டும் சீண்டும் பாகிஸ்தான்!!


டோலோ நியூஸ், பொலிஸ் அறிக்கையை மேற்கோள் காட்டி, குண்டுவெடிப்பு ஒரு போலீஸ் வாகனத்தை குறிவைத்ததாகத் தெரிவித்தது.


மூன்றாவது குண்டு வெடிப்பு காபூலின் PD5 இல் உள்ள கம்பெனி பகுதியில் நடந்தது. இங்கு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.


ALSO READ: ‘இம்ரான் கானுக்கு சவாலாக அரசியலில் இறங்குவேன்’ – அதிரடியாய் அறிவித்த Javed Miandad!!