ஆப்கானிஸ்தானிலிருந்து டெல்லி வந்தவர்களுக்கு கோவிட் தொற்று: மருத்துவமனையில் அனுமதி
தென்கிழக்கு டெல்லியில் உள்ள சாவ்லாவில் உள்ள ஐடிபிபியின் தனிமைப்படுத்தல் மையத்துக்கு திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த 81 பேர் அனுப்பப்பட்டுள்ளதாக இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் (ITBP) அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வந்த 78 பேரில் 16 பேர் செவ்வாய்க்கிழமை டெல்லியில் இறங்கினர். அவர்களில் குரு கிரந்த் சாஹிப்பின் 'ஸ்வரூப்புகளை' சுமந்து வந்த மூன்று ஆப்கானிய சீக்கியர்களும் அடங்குவர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 78 பேரும் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
செவ்வாய்க்கிழமை, 46 ஆப்கானிய சீக்கியர்கள் (Sikhs) மற்றும் இந்துக்கள் உட்பட 78 பேர், சீக்கிய வேதமான குரு கிரந்த் சாஹிப்பின் மூன்று பிரதிகளுடன், காபூலில் இருந்து துஷான்பே வழியாக ஏர் இந்தியா விமானத்தில் டெல்லிக்கு வந்தனர். மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி மற்றும் வி முரளீதரன் ஆகியோர், இந்திரா காந்தி சர்வதேச (ஐஜிஐ) விமான நிலையத்தில், ஆப்கானிலிருந்து வந்த சீக்கியர்களை வரவேற்றதோடு, சீக்கிய வேதத்தின் பிரதிகளையும் பெற்றுக்கொண்டனர். சாந்தோக்கின் கூற்றுப்படி, குரு கிரந்த் சாஹிப்பின் மூன்று பிரதிகளும் புதிய மகாவீர் நகரில் உள்ள குரு அர்ஜன் தேவ் ஜி குருத்வாராவுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
தென்கிழக்கு டெல்லியில் உள்ள சாவ்லாவில் உள்ள ஐடிபிபியின் தனிமைப்படுத்தல் மையத்துக்கு திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த 81 பேர் அனுப்பப்பட்டுள்ளதாக இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் (ITBP) அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ALSO READ: ஒரு வாரத்தில் போகவில்லை என்றால் போரில் சந்திக்கலாம்: இங்கிலாந்தை எச்சரிக்கும் தாலிபான்
திங்களன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அலுவலக குறிப்பின் படி, ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் மக்கள் ITBP தனுமைப்படுத்தல் மையத்தில் குறைந்தபட்சம் 14 நாள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். யாருக்காவது தொற்று உறுதி செய்யப்பட்டாலோ, அல்லது தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டாலோ, அவர்கள், டெல்லியின் என்சிடி கோவிட் மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும் என்று அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சிலருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், எத்தனை பேருக்கு தொற்று (Coronavirus) உள்ளது என்ற எண்ணிக்கையில் இன்னும் தெளிவு இல்லை என்று இந்திய உலக மன்றத்தின் தலைவர் புனித் சிங் சந்தோக் கூறினார்.
எல்என்ஜேபி மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் (Afghanistan) இருந்து இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டவர்களில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னர், அவர்கள் கோவிட் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். "இந்த இரண்டு நோயாளிகளும் ஆண்கள். அவர்களது நிலை சீராக உள்ளது. அவர்கள் நேற்று எல்என்ஜேபி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர், ”என்று அதிகாரப்பூர்வ ஆதாரம் தெரிவித்துள்ளது.
ALSO READ: சீக்கிய புனித நூலை சுமந்து கொண்டு தில்லி வந்தடைந்த ஆப்கான் சீக்கியர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR