காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்னும் அதிகமான தாக்குதல்கள் நடத்தப்படக் கூடும் என வந்துள்ள தகவல்களை மேற்கோள் காட்டி, காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது குடிமக்களை ஹமீத் கர்சாய் விமான நிலையப் பகுதியை விட்டு உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அமெரிக்க தூதரகம் தனது அறிவுறுத்தலில், அப்பே கேட், ஈஸ்ட் கேட் மற்றும் நார்த் கேட் ஆகிய பகுதிகளில் அதிக ஆபத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காபூலில் (Kabul) abul) இன்னும் அதிகமான தாக்குதல்கள் நடத்தப்படக் கூடும் என தகவல்கள் வந்துள்ளதால், தெற்கு விமான நிலைய பகுதி உட்பட, காபூல் விமான நிலையம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும். மேலும், உட்பகுதியில் உள்ள புதிய அமைச்சகம், பஞ்ஷிர் பெட்ரோல் நிலையல் அருகில் உள்ள பகுதி ஆகிய இடங்களில் இருந்து உடடனியாக விலகுமாறும் அமெரிக்கர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” என்று காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள பாதுகாப்பு எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.


பாதுகாப்பு காரணங்களுக்காக தாலிபான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு தூதரகம் தனது குடிமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.


ALSO READ: அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் இரு ISIS பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்: பென்டகன்


செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர், ஆப்கானிஸ்தானில் (Afghanistan) உள்ள இஸ்லாமிய அரசு சார்பான குழுவால் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தப்படும் என்ற நம்பகமான தகவல்கள் தங்களுக்கு வந்துள்ளது என்று உறுதி செய்தார். இந்த குழு சமீப ஆண்டுகளில் பல தாக்குதல்களை நடத்தியுள்ளது என்பதும், சிறுபான்மையினர் மற்றும் பிற சிவிலியன்கள் இவர்களின் இலக்காக இருந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


குறிப்பிடத்தக்க வகையில், அமெரிக்க அரசாங்கம், விமான நிலையத்தில் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து எச்சரிக்கை செய்து வருகிறது. மேலும் சில வாயில்கள் தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில், விமான நிலையத்திற்கான அணுகல் அதற்கேற்ப சரிசெய்யப்பட்டது. நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நிலைமை 'மிகவும் ஆபத்தாக உள்ளது' என்று கூறினார். 'அடுத்த 24-36 மணிநேரங்களில்' ஒரு புதிய தாக்குதல் வரக்கூடும் என்று அவரது இராணுவத் தளபதிகள் நம்புவதாகவும் அவர் எச்சரித்தனர்.


முன்னதாக, பிரிட்டிஷ் மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கங்கள் இதேபோன்ற எச்சரிக்கைகளை வெளியிட்டன. ஆஸ்திரேலிய அதிகாரிகள் "பயங்கரவாத தாக்குதலுக்கான அதி தீவிர  அச்சுறுத்தல் உள்ளது" என்று நிலையை விவரித்தனர்.


ஆஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் மாரிஸ் பெய்ன், செய்தியாளர்கள் சந்திப்பில், தாலிபான் (Taliban) ஆஸ்திரேலிய குடிமக்கள் மற்றும் விசா வைத்திருப்பவர்களை பாதுகாப்பாக வெளியேற அனுமதிப்பார்கள் என்று கூறினார். “எனினும், எங்கள் பயண ஆலோசனையையும் நாங்கள் வெளியிட்டுள்ளோம். ஆஸ்திரேலியர்கள் ஹமீத் கர்சாய் விமான நிலையத்திற்கு வர வேண்டாம். ஏனெனில் அங்கு ஆபத்து உள்ளது/ நீங்கள் காபூலில் இருந்தால், ஒரு பாதுகாப்பான இடத்துக்கு சென்று, அடுத்த ஆலோசனைக்காக காத்திருக்க வேண்டும்.” என்று அவர் மேலும் தெரிவித்தார்.


வியாழக்கிழமை காபூலில் நடந்த குண்டுவெடிபு தாக்குதலில் 13 அமெரிக்கர்கள் உட்பட 100 பேர் கொல்லப்பட்டனர். பிராந்திய ஐஎஸ்ஐஎஸ்-கோரசன் குழு இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ளது.


ALSO READ: பெல்ஜியம் வந்த ஆப்கான் சிறுமியின் வைரல் போட்டொ: துள்ளிக்குதிக்க வைக்கும் சுதந்திரம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR