இந்திய பெருங்கடலில் உள்ள மொரீஷியஸ் தீவில்  ஏற்பட்டுள்ள சேதத்தை குறைக்க முயற்சி ஆயிரக்கணக்கான மாணவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் மொரீஷியஸ் மக்கள் இடைவிடாது பணியாற்றி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜப்பானியர் ஒருவருக்கு சொந்தமான கப்பலில் இருந்து டன் கணக்கிலான  எரிபொருள் கசியத் தொடங்கியதை அடுத்து, இந்தியப் பெருங்கடல் தீவான மொரீஷியஸ் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் சுற்றுச்சூழல் அவசரகால நிலையை அறிவித்தது. 1.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட  சுற்றுலாவை பெரிதும் நம்பியுள்ள நாட்டிற்கு இந்த கசிவு ஆபத்தை பிரதிபலிக்கிறது


செயற்கைக்கோள் படங்கள் மூலம் எண்ணெய் கசிவு மிக மிக பயங்கரமாக பரவி வருவது கண்டறியப்பட்டதை அடுத்து பிரதமர் பிரவீந்த் ஜுக்நாத் சுற்றூ சூழல் அவசர நிலையை பிரகடனம் செய்தார்.


ALSO READ | 102 நாட்களுக்குப் பிறகு இங்கு மீண்டும் எட்டிப் பார்த்தது கொரோனா!!



பிரதமர் ஜுக்நாத் தனது அரசு பிரான்சிடம் உதவி கோரியுள்ளதாக குறிப்பிட்டார். சுமார் 1.3 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டிற்கு இந்த கசிவு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. மொரோஷியஸ் சுற்றுலாவை பெரிதும் நம்பியுள்ள நாடு என்பதால், ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றுநோயின் விளைவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


நடு கடலில் சிக்கித் தவிக்கும் கப்பல்களை மீட்பதற்கான நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்பம் தனது நாட்டில் இல்லை என்பதால், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் உதவியை  நாடியுள்ளதாக, மொரோஷியஸ் பிரதமர் தெரிவித்தார்


ALSO READ | Video: இந்தோனேஷியாவின் சினாபுங் எரிமலை வெடித்து பரவிய சாம்பலால் இருள் சூழ்ந்தது..!!!


மோசமான வானிலை காரணமாக, நிலைமை மோசமாகும் என தான் கவலை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 


அவர் ஐக்கிய நாடுகள் சபையிடமும் உதவி கோரியுள்ளார்.



ஆயிரக்கணக்கான் கடல் வாழ் உயிரினங்களை காக்க, சுற்றூ சூழல் ஆர்வலர்களுடன், பொது மக்களும் இணைந்து தொடர்ந்து பணியாற்றி வருகிறனர். 


இந்த சம்பவம் குறித்த போலீஸ் விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.