சீனாவை மையமாக கொண்டு இயங்கும் பிரபல ஆன்லைன் விற்பனை தள நிறுவனமான அலிபாபா நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜாக் மா தனது ஓய்வினை அறிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆங்கில துறை ஆசிரியரான ஜாக் மா கடந்த 1999-ஆம் ஆண்டு அலிபாபாவினை துவங்கினார். பிற்காலத்தில் அலிபாபா உதவியால் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்தார்.


54 வயதாகும் ஜாக் மா வருங்காலத்தில் படிப்பை நோக்கமாகக் கொண்ட சமூக சேவைப்பணிகளில் தன்னை ஈடுபடுத்த உள்ளதாள் அலிபாபா நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.


1964-ம் ஆண்டு பிறந்த ஜாக் மா, சிறுவயதிலேயே ஆங்கிலம் கற்பதில் அதீத ஆர்வமுடையவராக இருந்தார். இதற்காக ஆங்கிலம் பேசுபவர்களுடன் அதிக நேரத்தைச் செலவிட்டுள்ளார். எனினும் காலத்தில் கட்டாயத்தால் அவர் வியாபார ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் தன்னை வளர்த்துக்கொள்ள நேர்ந்தது. இந்நிலையில் தனது சிறுவயது கனவினை தொடரும் விதமாக தற்போது வியாபார உலக்கத்தில் இருந்து விடை பெறுவாதகா அறிவித்துள்ளார்.


தனது ஓய்வு குறித்துப் பேசிய ஜாக் மா, ''பில் கேட்ஸிடம் இருந்து ஏராளமான விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன். ஒரு நாள், விரைவில் ஆசிரியர் பணிக்கே திரும்பிவிடுவேன்'' என குறிப்பிட்டுள்ளார்.


அலிபாலா குழுமத்தின் சொத்து மதிப்பு சுமார் ரூ.30.34 லட்சம் கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன. போர்ப்ஸ் மதிப்பீட்டின்படி, ஜாக் மா ரூ.2.78 லட்சம் கோடி சொத்துடன் சீனாவின் முதன்மைப் பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகின்றார்.