இந்த ஆண்டு உலகில் பல விஷயங்கள் முதன்முறையாக நடந்துள்ளன. இங்கிலாந்தின் அரச குடும்பமும் இதற்கு விதிவிலக்கல்ல. அரச குடும்பத்திலும் இவ்வாண்டு பல விஷயங்கள் முதன்முறையாக நடந்துள்ளன. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை இம்முறை ஒரு அடி மேலே எடுத்துச் சென்ற இங்கிலாந்தின் அரச குடும்பம், உலகின் அனைத்து இடங்களில் உள்ள மக்களும் இங்கிலாந்து ராணியின் கிறிஸ்துமஸ் வாழ்த்தைப் பெறும் வகையில் செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைச் செய்ய, அரச குடும்பம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது. அமேசானின் ஸ்மார்ட் ஸ்பீக்கரான அலெக்ஸாவைப் பயன்படுத்தி மகாராணியின் கிறிஸ்துமஸ் தின செய்தி ஒளிபரப்பை பரப்பவும் அரச குடும்பம் முடிவு செய்துள்ளது.


உலகெங்கிலும் உள்ள மக்கள் அலெக்ஸாவிடம் (Alexa) மகாராணியின் கிறிஸ்துமஸ் செய்தியை பிளே செய்யுமாறு கேட்க ‘Alexa, play the Queen’s Christmas Day message’ என கூறினால் போதும். செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பயிற்சி பெற்ற ஸ்பீக்கர், ராணியின் பதிவு செய்யப்பட்ட செய்தியை பிளே செய்யும்.


இந்த சேவை, முதன்முறையாக, உலகின் அனைத்து இடங்களிலும் கிடைக்கும். ஆங்கிலம் முதன்மை மொழியாக அமைக்கப்பட்ட அனைத்து சாதனங்களிலும் இது கிடைக்கும்.


ALSO READ: பரிசுகளை வழங்கும் Santa Claus கொரோனா காலத்தில் வைரசை வழங்கினார்: பெல்ஜியத்தில் பரிதாபம்


இந்த அறிவிப்பை அமேசான் (Amazon) சமீபத்தில் வெளியிட்டது. "ஒரு சவாலான வருடத்திற்குப் பிறகு, காமன்வெல்த் முழுவதிலும் இருக்கும் மில்லியன் கணக்கான மக்கள் கிறிஸ்துமஸ் தினத்தன்று மரியாதைக்குரிய மகாராணியின் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்" என்று அலெக்சா ஐரோப்பாவின் இயக்குனர் எரிக் கிங் கூறினார்.


"2012 ஆம் ஆண்டில் கின்டிலில் நாங்கள் மகாராணியின் கிறிஸ்துமஸ் உரையை வெளியிட்டோம். அதுபோல் இவ்வாண்டு அலெக்சா மூலம் மகாராணி அளிக்கும் செய்தி மக்களிடம் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." என்று அவர் மேலும் தெரிவித்தார்.


இந்த ஆண்டு முதன்முறையாக, நோர்போக்கில் உள்ள சாண்ட்ரிங்ஹாமில் கிறிஸ்மஸைக் கொண்டாடுவதற்கு பதிலாக இங்கிலாந்து ராணியும் எடின்பர்க் டியூக்கும் கிறிஸ்துமசின் போது விண்ட்சர் கோட்டையில் தங்கியிருப்பார்கள். மேலும், இந்த ஆண்டு முதன்முறையாக, அரச தம்பதி கிறிஸ்துமசின் (Christmas) போது உறவினர்கள் யாரையும் விருந்துக்கு அழைக்காமல், தனியாகக் கொண்டாடுவார்கள்.


கொடூரமான வைரஸ் தொற்றால் இந்த ஆண்டு உயிர் இழந்தவர்களுக்கு வருத்தமும், தங்களுக்கு நெருங்கியவர்களை இழந்தவர்களுக்கு ஆறுதலும் அளிக்கும் விதமாகவும் இந்த ஆண்டு மிகவும் எளிய முறையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை மேற்கொள்ள இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், அரச குடும்பம் (Royal Family) எந்தவொரு கோவிட் வழிகாட்டுதல்களையும் மீறாமல் பார்த்துக் கொள்வதற்கும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள்ன.


ALSO READ: 800 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த டிசம்பரில் வானில் Christmas Star தெரியப் போகிறதா?


அலெக்சா செய்தி மூலம் பல ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து ராணி தொழில்நுட்பத்தை பொது பணிக்காக பயன்படுத்தியுள்ளார். இதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு ராணி முதன்முறையாக ட்வீட் செய்தார். 1957 ஆம் ஆண்டில் அவரது கிறிஸ்துமஸ் செய்து முதன்முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த தொலைக்காட்சி செய்தி அப்போது மக்களால் உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டது.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR