வாஷிங்டன்: அமெரிக்காவின் (America)மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் மீதான சைபர் தாக்குதலுக்குப் பின்னர் பிடென் நிர்வாகம் அவசரநிலையை அறிவித்துள்ளது. சைபர் தாக்குதல் காரணமாக ஒரு நாடு அவசரநிலை விதித்தது இதுவே முதல் முறை என் அகூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு நாளைக்கு 2.5 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் சப்ளை


சைபர் தாக்குதலைக் கொண்ட கோலோனியல் பைப்லைன் நிறுவனம் தினமும் 2.5 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை சப்ளை நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது, அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் உள்ள மாநிலங்களுக்கு குழாய் வழியாக 45 சதவீதம் பெட்ரோல், டீசல் மற்றும் பிற எரிவாயுக்கள் இங்கிருந்து தான் அனுப்பப்படுகின்றன


எண்ணெய் விலை 2-3% உயரக்கூடும்


இந்த சைபர் தாக்குதலின் காரணமாக, திங்களன்று எண்ணெய் விலை 2-3 சதவீதம் அதிகரிக்கும் என்று அமெரிக்க ஊடக அறிக்கைகளிலும் கூறப்படுகிறது. இந்த பிரச்சனை விரைவில் தீர்க்கப்படாவிட்டால், அதன் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.கொரோனா தொற்று நோயால் இந்த தாக்குதல் ஏற்பட்டுள்ளது என நிபுணர்கள் கருதுகின்றனர். ஏனெனில் பெரும்பாலான பொறியியலாளர்கள் தற்போது வீட்டிலிருந்து கணினிகளில் வேலை செய்வதால், பாதுகாப்பு குறைபாடு காரணமாக இது ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.


ALSO READ | கழிப்பறைக்கு போன பெண் கையில் குழந்தையோடு வந்த பகீர் சம்பவம்!

ஹேக்கர்கள் 100 ஜிபி தரவைத் திருடியுள்ளனர்


இந்த ransomware தாக்குதலை டார்க்சைட் (Darkside) என்ற சைபர்-கிரிமினல் கும்பலால் நடத்தப்பட்டதாக பல அமெரிக்க வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன, அதில் அவர்கள் 100 ஜிபி தரவை திருடிச் சென்றுள்ளனர். இது தவிர, ஹேக்கர்கள் சில கணினிகள் மற்றும் சர்வர்களில் தரவுகளை லாக் செய்து, அதை நீக்க வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டுகின்றனர். பணம் கொடுக்கப்படவில்லை என்றால், இந்தத் தரவை இணையத்தில் கசியவிடுவோம் என்று அவர்கள் மிரட்டினர்.


நியூயார்க்கிற்கு எண்ணெய் சப்ளை
அதே நேரத்தில், சேவைகளை மீட்டெடுக்க காவல்துறை, இணைய பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் எரிசக்தித் துறையுடன் தொடர்பு கொண்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு, தடைபட்ட சப்ளையில், சில இடங்களில், டெலிவரி பாயிண்ட் வரை சில சிறிய இணைப்புகள் செயல்படத் தொடங்கியுள்ளதாக காவல் துறை கூறியுள்ளது.


ALSO READ | கொரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமையை விட்டுக் கொடுக்க வேண்டும்: போப் பிரான்ஸிஸ்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR