ஒரு மிசோரி பெண்ணை கழுத்தை நெரித்து கொன்ற குற்றத்திற்காக அமெரிக்காவின் மத்திய அரசு ஒரு பெண்ணிற்கு மரண தண்டனையை அளித்துள்ளது. 1953 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக இந்த டிசம்பரில் அமெரிக்காவில் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆண்டு அமெரிக்காவில் பல மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் இரண்டு குற்றவாளிகளுக்கான தண்டனை தேதிகளை மத்திய அரசு இறுதி செய்துள்ளது. அதில் ஒரு பெண்ணும் அடங்குவார்.


லிசா மாண்ட்கோமெரி என அடையாளம் காணப்பட்டுள்ள அந்தப் பெண்ணுக்கு டிசம்பர் 8 ஆம் தேதி மரண ஊசி போடப்படும் என உள்ளூர் ஊடக சேனல்கள் தெரிவித்தன.


2004 ஆம் ஆண்டில் மாண்ட்கோமெரி கைது செய்யப்பட்டார், அவர் செய்த குற்றம் மிகவும் கொடூரமானது. மிசோரியைச் (Missouri) சேர்ந்த எட்டு மாத கர்ப்பிணிப் பெண் ஒருவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்த லிசா, அப்பெண்னின் வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்து, அதை கடத்திச் சென்றார்.


அமெரிக்க சிறைச்சாலைகளின் பதிவுகளின்படி, அமெரிக்காவில் கடைசியாக மரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் போனி பிரவுன் ஹெடி மற்றும் எத்தேல் ரோசன்பெர்க் ஆவர். போனி பிரவுன் ஹெடிக்கு, கடத்தல் மற்றும் கொலைக் குற்றத்திற்காக, 1953 ஆம் ஆண்டு டிசம்பர் 18 அன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. எத்தேல் ரோசன்பெர்குக்கு உளவு பார்த்த குற்றத்திற்காக மரண தண்டனை அளிக்கப்பட்டது. அவரது கணவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.


ALSO READ: “தீமை அழிந்து நன்மை மலரட்டும்”... ஜோ பிடன், கமலா ஹாரிஸின் நவராத்திரி வாழ்த்து..!!!


குற்றவாளி தற்போது இந்தியானாவின் டெர்ரே ஹாட்டில் உள்ள பெடரல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு தூக்கிலிடப்படும் இரண்டாவது குற்றவாளியும் அதே சிறைச்சாலையில் உள்ளார்.


இருப்பினும், மான்ட்கோமரியின் வழக்கறிஞர்கள் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். விசாரணையில் மாண்ட்கோமெரிக்கு மோசமான பிரதிநிதித்துவம் இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.


ALSO READ: US Election: ஜோ பிடன், கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக களம் இறங்குகிறார் ஒபாமா..!!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR