தென்சீனக் கடல்  பகுதி  மூன்று தீவு கூட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட  தென் சீனக் கடல் பகுதி முழுவதையும், சீனா தனது இறையாண்மைக்கு உட்பட்ட பகுதி என்று கூறுகிறது. மேலும்  சமீபத்திய ஆண்டுகளில் சீனா அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுடில்லி (New Delhi) : அமெரிக்கா மீண்டும் சீனாவின் நடவடிக்கையை எதிர்த்துள்ளது.  இந்த முறை அமெரிக்கா தென் சீனக் கடல் பகுதியில் பெய்ஜிங்கின் சட்டவிரோதமாக ஆதிக்கம் செலுத்தி வருவதைப் பற்றியது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ சனிக்கிழமையன்று பிராந்தியத்தில் வாஷிங்டனின் கொள்கை மிகவும் தெளிவாக உள்ளது என்பதை வலியுறுத்தியதுடன், தென் சீனக் கடலின்  சர்ச்சைக்குரிய பகுதி “சீனாவின் கடல் சாம்ராஜ்யம் அல்ல” என்றும் கூறினார். அதை எதிர்த்துப் போராட சுதந்திர நாடுகள் ஒன்று சேர வேண்டும் என்றும் அவர் சூசகமாகக் கூறினார்.


“தென் சீனக் கடல் சீனாவின் கடல் சாம்ராஜ்யம் அல்ல. பெய்ஜிங் சர்வதேச சட்டத்தை மீறி வரும் நிலையில், சுதந்திர நாடுகள் ஒன்றும் செய்யாவிட்டால், சீன கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபடும்  என்பதை வரலாறு காட்டுகிறது. இந்த பிரச்சனைகள் அனைத்தும் சர்வதேச சட்டத்தின் மூலம் தீர்க்கப்பட வேண்டும், ”என்று பைக் பாம்பியோ ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார். 


ALSO READ | கார்கில் வெற்றி தினம்  2020: கார்கில் மூலம் கல்வான் கற்றுக் கொள்ளும் பாடங்கள் என்ன


தென் சீனக் கடலின் பெரும்பகுதி முழுவதும் பரவியுள்ள கடல் வளங்களை சீனா முழுமையாக உரிமை கோருவதை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக நிராகரித்த சில வாரங்களுக்குப் பிறகு, பெய்ஜிங்கின்  ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் “முற்றிலும் சட்டவிரோதமானது” என்று அமெரிக்கா கூறியது.


ALSO READ | Work From Home: அதிர்ச்சிகரமான  உடல் மற்றும் மன நல பாதிப்புகள் என்ன...!!!


முன்னதாக ஜூலை 13 ம் தேதி, தென் சீனக் கடல் பகுதியில் நிலவும் ஆதிக்கம் குறித்த அமெரிக்க நிலைப்பாடு தொடர்பாக பாம்பியோ ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை ஒருதலைப்பட்சமாக திணிக்க சீன அரசுக்கு எந்த விதமான சட்டபூர்வமான காரணமும் இல்லை என்று அவர் கூறினார்.