பெய்ஜிங் ஒலிம்பிக்ஸில் அமெரிக்கா அரசு முறையில் கலந்து கொள்ளாது: அதிபர் ஜோ பைடன்
ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான அதிகாரப்பூர்வ அமெரிக்க தூதுக்குழுவை அனுப்ப வேண்டாம் என்று பைடன் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி (Jen Psaki) திங்கள்கிழமை தெரிவித்தார்.
வாஷிங்டன்: சீனாவின் ஜின்ஜியாங் (Xinjiang) மாகாணத்தில் நடந்து வரும் இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு எதிரான அடையாளப் போராட்டமாக, பெய்ஜிங்கில் நடைபெற உள்ள 2022 ஆம் ஆண்டின் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், அமெரிக்கா அரசு முறையில், அதிகாரபூர்வமகா கலந்து கொள்ளப்போவதில்லை ஜோ பைடன் என முடிவு செய்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான அதிகாரப்பூர்வ அமெரிக்க தூதுக்குழுவை அனுப்ப வேண்டாம் என்று பைடன் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி (Jen Psaki) திங்கள்கிழமை தெரிவித்தார்.
இருப்பினும், அமெரிக்க விளையாட்டு வீரர்கள் இன்னும் ஒலிம்பிக்கில் பங்கேற்பார்கள். ஆனால் நிர்வாகம் அரசு அதிகாரிகளை விளையாட்டு போட்டிகளுக்காக அனுப்பாது. பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள பாராலிம்பிக் போட்டிகளிலும் இதே போன்று, அரசு முறையில் கலந்து கொள்ளப் போவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சீனாவின் மேற்கு பிராந்தியமான ஜின்ஜியாங்கில் (Xinjiang), உய்குர் (Uyghur) இஸ்லாமிய மக்கள் மற்றும் பிற இன மற்றும் மத சிறுபான்மை குழுக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்கா தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் மனித உரிமைகள் பெரிய அளவில் மீறப்படும் நிலையில் , " இரு நாடுகளுக்கு இடையிலான உறவு வழக்கம் போல் இயல்பாக இருக்க முடியாது" என்று ஒரு "தெளிவான செய்தியை" அனுப்ப அமெரிக்கா விரும்புகிறது.
எனினும் பெய்ஜிங் சென்று ஒலிம்பிக்ஸில் போட்டியிட விரும்பும் விளையாட்டு வீரர்களுக்கு நிர்வாகத்தின் "முழு ஆதரவு" இருக்கும் என்றும் ஜென் சாகி (Jen Psaki) கூறினார்.
ஒலிம்பிக்கை முழுவதுமாக அமெரிக்கா புறக்கணிக்க முடிவெடுத்தால், பல ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டிகளுக்கு தாயர் தன்னை தயார் செய்து கொள்ள கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க விளையாட்டு வீரர்களுக்கு இது பெரும் ஏமாற்றமாக அமையும் என்பதால், முழுமையாக புறக்கணிப்பதை அமெரிக்கா "சரியான நடவடிக்கை" என்று வெள்ளை மாளிகை கருதவில்லை என்றும் Jen Psaki கூறினார். கடந்த 1980-ம் ஆண்டு முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் பதவியில் இருந்தபோது அமெரிக்கா ஒலிம்பிக்கை முழுமையாக புறக்கணித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் ஜோ பைடனும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் (Xi Jinping)நடத்திய மூன்றரை மணி நேர உச்சிமாநாட்டின் போது 2022 குளிர்கால ஒலிம்பிக் குறித்து பேசப்படவில்லை. இந்த உச்சிமாநாடு எந்த பெரிய முன்னேற்றத்தையும் தரவில்லை, மேலும் எதுவும் முன்கூட்டியே எதிர்பார்க்கப்படவில்லை. பிடென் மனித உரிமைகள், தைவான் மீதான சீன ஆக்கிரமிப்பு மற்றும் வர்த்தக பிரச்சினைகள் குறித்தும் கவலைகளை எழுப்பினார்.