சீனாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் தொற்று பாதிப்புகளால், அங்கு நான்காவது அலை குறித்த அச்சம் காரணமாக, அந்நாட்டு அரசு கடுமையான கட்டுபாடுகளையும், மிக கடுமையான லாக்டவுன் விதிகளையும் அமல்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நகரின் முக்கிய மாவட்டமான புடாங்கில், உள்ளூர் அரசாங்கத்தின் உத்தரவின் கீழ் பல இடங்களில் மெல்லிய உலோகத் தடுப்புகள் அல்லது கண்ணி வேலிகள் அமைக்கப்பட்டன என்று சீன வணிக ஊடகமான Caixin தெரிவித்துள்ளது.


சீனாவில் அதிகரித்து வரும் தொற்று பாதிப்புகளால், தன்னார்வலர்களும், கீழ்மட்ட அரசு ஊழியர்களும் உலோகம் மற்றும் இரும்புத் தடைகளைப் பயன்படுத்தி, சிறிய தெருக்களையும் அடுக்குமாடி குடியிருப்புகளின் நுழைவாயில்களையும் மூடியுள்ளனர் என்று பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.


தொற்று பாதிப்புகள் உள்ளதாக கண்டறியப்பட்ட கட்டிடங்கள், குடியிருப்புகளின் முக்கிய நுழைவாயில்களுக்கு சீல் வைக்கப்பட்டன, தொற்று நோய் தடுப்பு பணியாளர்கள் கடந்து செல்ல ஒரு சிறிய திறப்பு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது


சமூக ஊடகங்களில், மக்கள் சனிக்கிழமையன்று புதிய உலோக தடுப்புகளை காட்டும் வீடியோக்களை வெளியிட்டனர். சிலர் இந்த கடும் நடவடிக்கைகள் காரணமாக கோபத்தை வெளிப்படுத்தினர். முக்கிய சாலைகளை பயன்படுத்த  தடை  போடாமல் இருக்க வேண்டும் என மக்கள் விரும்புவதாக  சைசின் இதழ் தெரிவித்துள்ளது.


ஷாங்காயின் Xuhui மாவட்டத்தில் ஒரு கட்டிடத்தை விட்டு வெளியேறும் குடியிருப்பாளர்கள் தங்கள் முன் நுழைவாயிலில் உள்ள கண்ணி வேலி தடுப்புகளை உடைத்து, அதை வைப்பதற்கு பொறுப்பான காவலரைத் தேடிச் சென்றனர்.


ஷாங்காய் நகரத்தில் வசிக்கும் பலர் மளிகைப் பொருட்களைப் பெறுவதில் கூட சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். சில பண்டமாற்று முறையை பயன்படுத்தி பொருட்களை கின்றனர். மேலும் மொத்தமாக பொருட்களை வாங்கி சேமித்து வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர். போக்குவர்த்து மீதான கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, சரியான நேரத்தில் போதுமான மருத்துவ கவனிப்பை கூட பெற முடியவில்லை.


ஷாங்காய் நகரத்தின் ஜீரோ  கோவிட் கொள்கையில்,தொற்று பரவல் அபாயத்தின் அடிப்படையில் நகரத்தின் பகுதிகள் மற்றும் குடியிருப்புகள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டு, அதிக தொற்று பரவல் உள்ள முதல் வகையைச் சேர்ந்த பகுதிகளில் கடுமையான கோவிட்-19 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 


மேலும் படிக்க | COVID 4th Wave: ஒமிக்ரானில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க செய்ய வேண்டியவை


குறைந்த தொற்று பாதிப்புகள் உள்ள சில கட்டிடங்கள் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவும் பொது இடங்களுக்கு செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. 


ஷாங்காய் நகரின் கடுமையான லாக்டவுன் அணுகுமுறை உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. வெள்ளிக்கிழமை, சீன இணைய பயனர்கள் ஆறு நிமிட வீடியோவைப் பகிர்ந்து கொண்டனர். இதற்கு ஏப்ரல் குரல்கள் என்று தலைப்பிடப்பட்டது. இதில் ஒரு மாத கால லாக்டவுனில் அனுபவித்த சில சவாலான தருணங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.


ஏப்ரல் 8 அன்று ஷாங்காய் குடியிருப்பு ஒன்றில் வசிப்பவர்கள், "எங்களுக்கு உணவு அனுப்புங்கள்! உணவு அனுப்புங்கள்! எங்களுக்கு உணவு அனுப்புங்கள்!’ என கூறுவதை காண முடிந்தது. 


சீனாவில் ஞாயிற்றுக்கிழமை 21,796 புதிய கோவிட் -19 நோய்த்தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. எனினும் பெரும்பாலானவை ஷாங்காயில்  பதிவானவை என்பதோடு, அறிகுறியற்ற வை என்பதும் குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க |  சீனாவின் மீண்டும் தலை தூக்கும் கொரோனா; ஷாங்காய் நகரில் தீவிர லாக்டவுன் அமல்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR