விபத்தில் சிதைந்த முகம் கைகள்... முகம், கை மாற்று சிகிச்சை அளித்தது மறுவாழ்வு..!!
அமெரிக்காவை சேர்ந்த 22 வயதான, ஜோ டிமியோ (Joe DiMeo), தனது சிதைந்த முகம் மற்றும் கைகள் சரியாதை நினைத்து பெரும்மிதம் கொள்வதோடு, அனைத்தையும் தொட்டு பார்த்து உணர்ச்சி வசப்படுகிறார்.
ஜோ டிமியோ (Joe DiMeo) என்ற முகம் கை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நபர், இப்போது தன் வேலைகளை தானே செய்து கொள்வதில் மகிழ்ச்சியாக உள்ளது
அமெரிக்காவை சேர்ந்த 22 வயதான, ஜோ டிமியோ (Joe DiMeo), தனது சிதைந்த முகம் மற்றும் கைகள் சரியாதை நினைத்து பெருமிதம் கொள்வதோடு, அனைத்தையும் தொட்டு பார்த்து உணர்ச்சி வசப்படுகிறார்
டிமியோ, ஆறு மாத காலத்திற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு தனது சிதைந்த முகத்தையும், கைகளையும் குணப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு தீ விபத்தில் அவரது முகமும், கைகளும் சிதைந்தன. விரல்கள் துண்டிக்கப்பட்டு, முகமும் சிதைந்து போனது.
டிமியோவிற்கு வாகனம் ஓட்டுவது, குறிப்பாக கார் ஓட்டுவது மிகவும் பிடித்த பொழுது போக்காக இருந்தது.
வாழ்க்கையை திருப்பி போட்ட அந்த சபவம் ஜூலை 14, 2018 அன்று நேரிட்டது. தனது இரவு-ஷிப்ட் வேலையில் இருந்து வீட்டிற்கு வந்த டிமியோவின் கார் விபத்துக்குள்ளானது. கார் உருண்டு சென்று அவரது உடலில் 80% பகுதியில் தீவிரமான தீக்காயங்கள் ஏற்பட்டது. அவரது முகமும், கைகளும் சிதைந்து போனது.
அமெரிக்காவின் (America) நியூ ஜெர்சியிலுள்ள லிவிங்ஸ்டனில் உள்ள செயிண்ட் பர்னபாஸ் மருத்துவ மையத்தில், தீக்காயங்களுக்கான சிகிச்சை பிரிவில் நான்கு மாதங்கள் செலவிட்டார். அவர் அப்போது கோமா நிலையில் இருந்தார், மேலும் சுமார் 20 முறை ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்ட போதிலும், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இருக்கவில்லை.
பின்னர் டிமியோ 2019 மார்ச்சில் என்.யு.யு லாங்கோன் ஹெல்த் நிறுவனத்தில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவின் தலைவரான டாக்டர் எட்வர்டோ ரோட்ரிகஸ் (Dr Eduardo Rodriguez) என்பவரிடம் சிகிச்சை பெறத் தொடங்கினார் அவர் ஏற்கனவே மூன்று வெற்றிகரமான முக மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார்.
ஆகஸ்ட் 12 ஆம் தேதி, டாக்டர் ரோட்ரிக்ஸ் உடன் 140 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள், செவிலியர்கள் மற்றும் பிற ஊழியர்களைக் கொண்ட ஒரு குழு 23 மணி நேர அறுவை சிகிச்சை செய்து, டிமியோவுக்கு ஒரு புதிய முகத்தையும் ஜோடி கைகளையும் கொடுத்தது.
அவர் இன்னும் சிகிச்சையில் இருக்கிறார் என்றாலும், மிகவும் புத்துணர்ச்சியுடன் காணப்படுகிறார். மெதுமெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்.
ALSO READ | தூங்கி எழுந்ததும் செல்போனை பார்க்கிற பழக்கம் இருக்கா... இந்த செய்தியை படியுங்க..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR