ஜெர்மனி தேர்தல்: ஏஞ்சலா மெர்கல் 4-வது முறையாக வெற்றி!
கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி 311 இடங்களில் வெற்றி பெற்று சமூக ஜனநாயக கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது.
கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியின் ஏஞ்சலா மெர்கல் தொடர்ந்து மூன்றாவது முறை சான்சலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த அரசின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் அடுத்த சான்சலரைத் தேர்ந்தெடுப்பதற்கான 19-வது நாடாளுமன்ற தேர்தல் நேற்று தொடங்கியது.
இந்நிலையில் இந்த தேர்தலில் 6 கோடியே 15 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றிருந்தனர். 6 கட்சிகள் தேர்தல் களத்தில் உள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது.
இதில், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் சார்பில் போட்டியிட்ட ஏஞ்சலா மெர்கல் 33.2 சதவீதம் வாக்குகள் பெற்று சாதனை வெற்றி பெற்றார். அவரை தொடர்ந்து, சமூக ஜனநாயக கட்சி 20.8 சதவீதம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஜெர்மன் பிரதமராக 4-வது முறையாக ஏஞ்சலா மெர்கல் பதவியேற்கிறார்.