ஈரான் மற்றும் ஈராக் எல்லைப்பகுதியான கெர்மன்ஷா மாகாணத்தில் நேற்றிரவு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஒன்று திரண்டனர். சில கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தன. 


இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக ஈரானின் வடமேற்கு, வடக்கு மற்றும் மத்திய பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 


இந்த நில நடுக்கத்தினால் இரு நாடுகளிலும் சுமார் 135 பேர் இறந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கெர்மன்ஷா மாகாணத்தில் மட்டும் 120-க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 1500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்களை மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 


மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது. ஈராக்கில் 4 பேர் பலியானதாகவும், 50 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் குர்திஷ் சுகாதாரத்றை அதிகாரிகள் கூறுகின்றனர்.