மொமடிஷு: இன்று (சனிக்கிழமை) சோமாலியாவின் தலைநகர் மொகாடிஷுவின் (Mogadishu) புறநகரில் கார் குண்டு வெடித்ததில் குறைந்தது இதுவரை 78 பேர் இறந்துள்ளனர். மேலும் 125 பேருக்கு அதிகமானோர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவித்துள்ளது. மொகாடிஷுவில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியை குறிவைத்து பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக, அரசாங்க செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் முக்தார் கூறுகையில், தாக்குதல் நடத்தியவர் தனது வாகனத்தை "எக்ஸ்-கண்ட்ரோல் ஆஃப்கோய்" (Ex-control Afgoye) சோதனைச் சாவடிக்குள் செலுத்தினார். இது சோமாலியாவின் தெற்கே தலைநகருடன் இணைக்கும் ஒரு பிரபலமான சந்திப்பாகும். எப்பொழுது பரபரப்பாக இயக்கும் இந்த பகுதியில் தாக்கல் நடத்தி உள்ளனர். இதனால் பலர் இறந்துள்ளனர். இறந்தவர்களில் பல்கலைக்கழக மாணவர்களும் உள்ளனர் என முக்தார் கூறினார்.


சோமாலிய தலைநகரில் உள்ளூர் நேரப்படி காலை 8 மணியளவில் அதிகமாக மக்கள் கூடும் நேரத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்கலும் இறந்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.


பலர் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.


இந்த தாக்குதலுக்கு அல்-ஷபாப் பொறுப்பேற்றுள்ளார். 2006 முதல், அல்கொய்தா பயங்கரவாதக் குழுக்களுடன் இணைந்த மொகாடிஷுவில் பல்வேறு தாக்குதலை நடத்தி வருகிறது. 2011-ல் அல்-ஷபாப் குழுவை சோமாலிய தலைநகரிலிருந்து வெளியேற்றப்பட்டது. ஆனாலும் அவ்வப்போது அவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். சோமாலியாவின் அரசாங்கம் மற்றும் இராணுவ இலக்குகளை எதிர்த்து பலமுறை தாக்குதல்களை நடத்தியது.


இரண்டு வாரங்களுக்கு முன்பு, சோமாலிய தலைநகரில் அல்-ஷபாப் குழு தாக்குதல் நடத்தியதில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.