துனிசியா நாட்டில் அகதிகளை ஏற்றி கொண்டு சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்ததால் சுமார்  80 பேர் காணவில்லை. அவர்கள் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2011 ஆம் ஆண்டு  நீண்டகாலமாக ஆட்சி செய்து வந்த முயம்மர் கடாபி பதவி நீக்கம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதிலிருந்து, லிபியாவில் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது.


அதனால் 80-க்கும் மேற்பட்டோர் அகதிகள் லிபியாவில் இருந்து ஐரோப்பாவை நோக்கி படகில் பயணித்தனர். அந்த படகு ஸார்சிஸ் நகருக்கு அருகே படகு பாரம் தாங்காமல் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த 80 மாயமாகி உள்ளனர். அவர்கள் பலியாகியிருக்கலாம் என கூறப்படுகிறது.


அதில் படகில் இருந்து சில மரக்கட்டைகளை பயன்படுத்தி 4 பேர் நீந்தி கரையை அடைந்தனர். அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன. அதில் ஒருவர் மருத்துவமனையில் இறந்துவிட்டார். 


உயிர்பிழைத்த 3 பேர் லிபியாவின் ஜுவாராவிலிருந்து புறப்பட்டதாகக் கூறினர். "நாங்கள், நான்கு பேர், விறகு மீது அமர்ந்திருந்தோம். எங்களை அலைகள் தாக்கின. இரண்டு நாட்கள் அந்த மரத் துண்டில் உட்கார்ந்தோம்" எனவும் கூறினார்கள்.