வங்காளதேச PM-ஆக ஹசீனா; 298 தொகுதிகளில் 287 தொகுதியில் வெற்றி...
பங்களாதேஷ் பிரதமர் தேர்தலில் ஷேக் ஹசீனா பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி. தேர்தல் முடிவு வெளியிடப்பட்ட 298 தொகுதிகளில் 287 தொகுதிகளை கைபற்றியுள்ளார்....
பங்களாதேஷ் பிரதமர் தேர்தலில் ஷேக் ஹசீனா பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி. தேர்தல் முடிவு வெளியிடப்பட்ட 298 தொகுதிகளில் 287 தொகுதிகளை கைபற்றியுள்ளார்....
வங்காளதேச நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் மற்றும் முன்னாள் பிரதமரான கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சி ஆகிய 2 கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி உள்ளது.
இங்கு மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில், 1,848 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். வாக்கு பதிவானது 40 ஆயிரத்து 183 மையங்களில் நடைபெற்றது. மொத்தமுள்ள, 300 எம்.பி., தொகுதிகளில், 299-க்கு நடந்த தேர்தலில், 1,848 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஒரு தொகுதியில், வேட்பாளர் இறந்ததால், ஓட்டு பதிவு ஒத்தி வைக்கப்பட்டது.
தேர்தலையொட்டி நடந்த கலவரங்களைக் கட்டுப்படுத்த காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். ஆளுங்கட்சியான அவாமி லீக் கட்சிக்கும் எதிர்கட்சியான பிஎன்பி-க்கும் இடையில் நடந்த மோதலில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
இன்று காலை 8 மணி அளவில் வாக்குப் பதிவு ஆரம்பமானது. இந்த முறையும் பிரதமர் ஷேக் ஹசீனா வெற்றி பெற்று, 4வது முறையாக ஆட்சி அரியணையல் அமருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
40,000 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடந்து வரும் நிலையில், 60,000 பாதுகாப்புப் படையினர், பாதுகாப்புக்காக உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையின் முடிவில், ஆளும் அவாமி லீக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தேர்தல் முடிவு வெளியிடப்பட்ட 298 தொகுதிகளில் 287 தொகுதிகளை கைபற்றியுள்ள பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான, அவாமி லீக் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. முக்கிய எதிர்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சி வெறும் 6 இடங்களை மட்டுமே கைபற்றியுள்ளது. தேர்தல் முடிவை புறக்கணிப்பதாக எதிர்கட்சி அறிவித்துள்ளது.
வங்கதேசத்தில், பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்ந்து நான்காவது முறையாக பிரதமர் பதவியை கைப்பற்றியுள்ளார்.