வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டினார். கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான இந்திய அரசின் முயற்சிகள் மற்றும் சிறப்பாக நிறைவேற்றப்பட்டுள்ள  பொது மக்களுக்கான தடுப்பூசி திட்டம் மிகவும் பாராட்டுக்குரியவை என்று அவர் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, கோவிட்-19 தொற்றுநோய்களின் போது இந்தியாவின் ஒத்துழைப்பைப் பாராட்டினார். இரு நாடுகளுக்கும் இடையே மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பரிமாற்றம் சிறந்த அண்டை நாடுகளின் சிறந்த ராஜீய உறவுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று கூறினார்.


குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையத்தின் (ஜி.சி.டி.எம்) அடிக்கல் நாட்டு விழாவுக்கான வீடியோ செய்தியில், ஹசீனா, "இரண்டு அண்டை நாடுகள் எவ்வாறு ஒருவரையொருவர் உதவிகள் வழங்கி, நெருக்கடியான காலங்களில்  ஒத்துழைப்புடன் செயல்படுவதை உலகம் முழுவதும் பார்த்திருக்கிறது" என்று கூறினார். 


மேலும் படிக்க | விஞ்ஞானிகளுக்கும் புதிராக உள்ள பங்களாதேஷின் அதிசய சிவன் கோவில்..!!


டெய்லி ஸ்டார் செய்தித்தாள் அறிக்கையின்படி, பிரதமர் ஹசீனா தனது அறிக்கையில், "கோவிட் -19 தொற்று நோய்களின் போது பங்களாதேஷ்-இந்தியா ஒத்துழைப்பு அண்டை நாடுகளின் சிறந்த இராஜதந்திரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு" என்று கூறினார்.


முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, தனது நாட்டின் சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு   (PM Narendra Modi) விடுத்த அழைப்பினை ஏற்றபிரதமர் மோடி 2 நாள் பயணமாக வங்கதேசம் சென்றார்.



வங்க தேசத்தின் சுதந்திர தின பொன்விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின், வங்கதேசத்தின் தந்தை எனப்படும் ஷேக் முஜிபூர் ரகுமானின் நூற்றாண்டு விழாவிலும் பிரதமர் மோடி பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | வங்க தேசம் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR