நெகிழ வைத்த அமெரிக்க அதிபராக ஒபாமாவின் இறுதி உரை
அமெரிக்காவில் கடந்த நவம்பர் 8-ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. அதில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.
இல்லினாய்ஸ்: அமெரிக்காவில் கடந்த நவம்பர் 8-ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. அதில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா சிகாகோநகரில் இன்று நடைப்பெற்ற தனது பிரியா விடை நிகழ்ச்சியில் இறுதி உரை நிகழ்த்தி அனைவரையும் நெகிழச் செய்தார்.
நீங்கள் என்னை சிறந்த மனிதனமாகவும், சிறந்த அதிபராகவும் மாற்றி உள்ளீர்கள். நீங்கள் நாள்தோறும் எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளீர்கள். அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்கும் நேரமிது. கடந்த சில வாரங்களாக நானும் எனது மனைவியும் பாராட்டு மழையில் நனைந்து வருகிறோம். இப்போதைய நிலையில் அமெரிக்கா பலமான இடத்தில் உள்ளது. வரலாற்றிலேயே அதிக அளவிலான வேலைவாய்ப்பை அமெரிக்கா உருவாக்கி உள்ளது.
8 ஆண்டுகளில் எந்த பயங்கரவாத தாக்குதலும் அமெரிக்காவில் நடைபெறவில்லை. பிரிவினையை தூண்டுவதே இனவாதமாக உள்ளது. தவறான நபர்களை தேர்வு செய்துவிட்டு வருத்தப்படுவதில் அர்த்தமில்லை.
அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக உள்ள யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது பதவியேற்ற போது இருந்ததை விட அமெரிக்கா சிறந்ததாகவும் வலிமையானவும் உள்ளது என்றார்.