தேசிய சுகாதார ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, ஜூன் 13 ஆம் தேதிக்கு பிறகு 57 புதிய உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 வழக்குகள் பதிவாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேசிய சுகாதார ஆணையம் ஒரு அறிக்கையில், உறுதிப்படுத்தப்பட்ட புதிய வழக்குகளில் 38 உள்நாட்டில் பரவியுள்ளன. கடந்த இரண்டு நாட்களில் தலா 36 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. 


50 நாட்களுக்கு மேலாக பெய்ஜிங்கில் புதிய கொரோனா நோயாளிகள் யாரும் கண்டறியப்படாமல் இருந்த நிலையில் இப்போது புதிய தொற்றுகள் கண்டறியப்படுகின்றன. இந்த பரவல் அந்த நகரின் மிகப் பெரிய மொத்த விற்பனை சந்தையான ஷின்ஃபடி சந்தையுடன் தொடர்புடையது என க்ளோபல் டைம்ஸ் கூறியுள்ளது. 


36 புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டதால் தற்போது ஷின்ஃபடி சந்தை முடக்கப்பட்டது. 


 


READ | Delhi: 10-49 படுக்கை திறன் கொண்ட நர்சிங் ஹோம்கள் 'கோவிட் -19 சுகாதார மையம்' என அறிவிப்பு


 


இதற்கிடையில் COVID-19 இன் புதிய அலை குறித்த அச்சத்தைத் தூண்டி, சனிக்கிழமை சுற்றுலா மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை தலைநகர் தடைசெய்தது.


READ | அவசரக் காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள் - பிரதமர் மோடி


சீனாவின் பிரதான நிலப்பரப்பில் மொத்தம் COVID-19 வழக்குகளின் எண்ணிக்கை இப்போது 83,132 ஆக உள்ளது, அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை மாறாமல் 4,634 ஆக உள்ளது.