பெர்லின்: பெர்லினின் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் லாரி புகுந்து விபத்தில் 12 பேர் பலி, 48 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என சந்தேகிப்பதாக போலீசார் கூறுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெர்மனியின் பெர்லின் நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மார்க்கெட் போடப்பட்டிருந்தது. கைசெர் சர்ச் அருகே உள்ள கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தனர்.


அப்போது அப்பகுதியில் வேகமாக வந்த லாரி, கூட்டத்தில்குள் புகுந்தது. இதில் 12 பேர் பலியாகினர். இந்த விபத்தில் 48-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என பெர்லின் நகர போலீசார் தகவல் அளித்துள்ளனர். 


அங்குள்ள பல கடைகள் இடித்துத் தள்ளப்பட்டு, பலர் காயமடைந்து தரையில் கிடப்பதைக் காண முடிகிறது. அப்பகுதியில் மீட்புக்குழுவினர், மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அப்பகுதி போலீசார் அறிவித்துள்ளனர். ஆனால் இந்த விபத்தை ஏற்படுத்திய, லாரி டிரைவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. டிரைவர் தப்பிவிட்டதாக தெரிவித்துள்ள போலீசார், அவனை விரைவில் கைது செய்வோம் என்று தெரிவித்துள்ளனர். 


இது தீவிரவாத தாக்குதலாக இருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரனை மேற்கொண்டுள்ளனர். அதே நேரத்தில் பாகிஸ்தானில் இருந்து அகதியாக வந்த நபர் ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 


இந்த தாக்குதலுக்கு அமெரிக்க சார்பில் கண்டனம் தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் தான் காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.