Great Wall Of China: சீனாவின் மத்திய ஷாங்சி மாகாணத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, உலக அதிசயங்களில் ஒன்றும், அந்நாட்டின் நினைவுச்சின்னங்களில் ஒன்றுமான சீனப் பெருஞ்சுவரின் ஒரு பகுதியை சேதப்படுத்தியதாகக் கூறி இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உள்ளூர் ஊடக தகவல்களின்படி, தொழிலாளர்கள் அந்த பெருச்சுருவருக்கு கீழ் இயந்திரம் ஒன்று பயன்படுத்தி 32ஆவது பெரிய சுவரின் ஒரு பகுதியை கடுமையாக சேதப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


38 வயதுடைய ஆண் மற்றும் 55 வயதுடைய பெண் ஆகியோர் அப்பகுதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை தவிர வேறு யாரும் கைது செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. பெருஞ்சுவரில் ஏற்கனவே உள்ள சுரங்கத்தை விரிவுபடுத்துவதன் மூலம் அவர்கள் ஒரு பெரிய இடைவெளியை தோண்டியதாக போலீசார் கூறுகிறார்கள், இதனால் அவர்கள் தோண்டிய சுரங்கம் வழியாக எளிதாக செல்ல முடியும்.  காவல்துறையின் கூற்றுப்படி, கட்டுமானத் தொழிலாளர்கள் தாங்கள் பயணிக்க வேண்டிய தூரத்தைக் குறைப்பதற்கான இந்த சுரங்கத்தை தோண்டியதாக கூறப்படுகிறது.


மாற்ற முடியாத சேதம்


"மிங் பெருஞ்சுவரின் ஒருமைப்பாட்டிற்கும் கலாச்சார நினைவுச்சின்னங்களின் பாதுகாப்பிற்கும் மாற்ற முடியாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்" என்று காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், நேற்று (செப்டம்பர் 4) அரசு நடத்தும் சிசிடிவி ஊடகம் தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | ஜில் பிடனுக்கு கொரோனா... ஜோ பிடனின் இந்திய பயணம் பாதிக்கப்படுமா..!!


சுவருக்கு சேதம் விளைவித்ததாக கிடைத்த புகாரின் பேரில், இருவரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி அன்று யுயூ கவுண்டியில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு மேலும் விசாரணையில் உள்ளது என காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


"தற்போது, இரண்டு சந்தேக நபர்களும் சட்டத்தின்படி கிரிமினல் காவலில் வைக்கப்பட்டுள்ளனர், மேலும் வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது" என்று அந்நாட்டின் அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 1987ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் சீன பெருஞ்சுவர் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது, கி.மு. 220 முதல் 1600 களில் மிங் வம்சம் வரை உலகின் மிகப்பெரிய இராணுவக் கட்டமைப்பாக இருந்த பெரிய சுவர் கட்டப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் பார்க்கும் தற்போதைய அமைப்பு மிங் வம்சத்தின் காலத்தில் கட்டப்பட்டது, எனவே இது மிங் பெரிய சுவர் என்று குறிப்பிடப்படுகிறது.


சுவரின் பெரும்பகுதி இடிக்கப்பட்டது


மிங் வம்சத்தின் (1368-1644) காலத்தைச் சேர்ந்த சுவரின் ஒரு பகுதியில் சேதம் ஏற்பட்டது. இது ஒப்பீட்டளவில் நன்கு பாதுகாக்கப்பட்ட கண்காணிப்பு கோபுரத்தின் தலைமை பகுதியாகும். மேலும் இது மாகாண கலாச்சார நினைவுச்சின்னமாக பட்டியலிடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக, குறிப்பாக தொலைதூர கிராமப்புறங்களில் சுவரின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளன அல்லது இடிக்கப்பட்டுள்ளன.


2016ஆம் ஆண்டில், பெய்ஜிங் டைம்ஸ் செய்தித்தாள் மிங் பெரிய சுவரின் 30 சதவீதத்திற்கும் அதிகமானவை முற்றிலும் மறைந்துவிட்டதாகவும், அதில் 8 சதவிகிதம் மட்டுமே நன்கு பாதுகாக்கப்பட்டதாகக் கருதப்படுவதாகவும் தெரிவித்தது.


மேலும் படிக்க | பார்ட்டிக்கு விமானம்... ஆடம்பரத்தால் பறிபோன விமானியின் உயிர் - அதிர்ச்சியூட்டும் வீடியோ
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ