சாலை விபத்தில் இறந்த ஒரு நபரின் மனைவி மற்றும் ஆசைநாயகி என இருவருக்கும் ஆயுள் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ள செய்தி இத்தாலிய பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியை பிடித்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இத்தாலியின் வடகிழக்கில் டுரின் நகரைச் சேர்ந்த 39 வயது நபருக்கு திருமணம் ஆகி ஒரு மகனும் இருந்தார். ஆனால் அவருக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது.  


அந்த மனிதருடன் தொடர்ந்து உறவில் இருந்த பெண்ணுக்கு சட்டரீதியான உரிமை இல்லை என்றாலும், அவருக்கும் பாதிப்பு இருப்பதாக ஆசைநாயகியின் வழக்கறிஞர் வாதிட்டார். ஜினோ அர்னோன் (Gino Arnone) என்ற வழக்கறிஞர், இந்த விஷயத்தில், தன்னுடன் நெருக்கமாக இருந்த ஒருவரை இழந்த பெண் இழப்பீடு பெற தகுதியுடையவர் என்று காப்பீட்டு நிறுவனத்தை ஏற்றுக் கொள்ள வைத்தார்.


Also Read | 16 மனைவிகள் 151 குழந்தைகள், அடுத்த திருமணத்திற்கு ரெடி! 


ஒரு வருடத்திற்கு முன்னர் நெடுஞ்சாலை விபத்தில் இறந்த நபரின் உடலை அடையாளம் காண, ஆசைநாயகியை போலீசார் அழைத்தனர். இந்த செய்தியை லா ஸ்டாம்பா செய்தித்தாள் உறுதி செய்கிறது. அந்த சந்தர்ப்பத்தில் விபத்தில் இறந்தவரின் மனைவி பணி நிமித்தமாக வெளியூரில் இருந்தார்.
 
இறந்துபோன அந்த நபர் வாரத்தில் மூன்று நாட்கள் தான் திருமணம் செய்துக் கொள்ளாமல் வாழ்ந்த பெண்ணுடனும், நான்கு நாட்கள் தனது சட்டப்பூர்வ மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார்.


காப்பீட்டுத் தொகை எவ்வளவு என்று தெரியவில்லை. ஆனால், கணிசமான தொகை ஆசைநாயகிக்கு கொடுக்கப்பட்டதாக பத்திரிக்கை செய்தி கூறுகிறது. நீதிமன்றத்திற்கு வெளியே சமரச தீர்வு ஏற்பட்டதால், காப்பீட்டு நிறுவனம், சட்டப்பூர்வ மனைவிக்கும், திருமணம் செய்துக் கொள்ளாமல் ஆசைநாயகியாக இருந்த பெண்ணுக்கும் காப்பீட்டுத் தொகையை வழங்கியது.


இந்த செய்தி மிகவும் ஆச்சரியமான விஷயம் என்று அனைவரும் கருதுகின்றனர். இந்த வழக்கை மேற்கோள் காட்டி, எதிர்காலத்தில் இதுபோல் திருமணத்தை தாண்டிய உறவுகளுக்கும் இழப்பீடுகள் கொடுக்கப்படுமா என்ற கேள்விகள் எழுகின்றன.  


Also Read | தமிழ் பஞ்சாங்கம் 14 மே, 2021: வெள்ளிக்கிழமை இன்றைய நல்ல நேரம், சுப ஹோரைகள்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR