Bizarre News: ஒரு பொருளை பயன்படுத்தும்போது, அதில் கொடுக்கப்பட்டிருக்கும் அத்தனை அறிவுரைகளை படிப்பதும், அதனை புரிந்துகொள்வதும் மிகவும் அவசியமாகிறது. அதுவும், மருந்துகள் போன்ற மிகவும் அத்தியாவசியமான பொருள்களை எடுத்துகொள்ளும்போது அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் செயல்முறைகளையும், அறிவுரைகளையும் படிக்க வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவ்வாறு இல்லாமல், அலட்சியமாக ஒரு பொருளை பயன்படுத்தினால், அது மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம். இங்கு, ஒரு பெண் சொட்டு மருந்து என நினைத்து, சூப்பர் க்ளூவை கண்ணில் போட்டதால், பார்வையே பறிபோயுள்ளது. அவரின் துயரமான இந்த கதை மற்ற அனைவருக்கும் நிச்சயம் பாடமாக இருக்க வேண்டும் என அவரோ கருத்து தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | அமெரிக்க முன்னாள் அதிபர் மீதான வழக்கு! நம்பிக்கையை இழப்பீர்கள்: எச்சரிக்கும் மஸ்க்


அமெரிக்காவை சேர்ந்த லைட் எனும் 22 வயதான டிக்-டாக் பிரபலம் தன்னை இணையத்தில்  பின்தொடர்பவர்களுக்கு அறிவுரை கூறும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, எந்த பொருளையும் பயன்படுத்தும்போது, அதன் லேபிளில் உள்ளவற்றை படிக்க வேண்டும் என கூறியுள்ளார். கண் சொட்டு மருந்து என நினைத்து, அதேபோன்று இருக்கும் சூப்பர் க்ளூ பசையை கண்ணில் போட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்தார். 


அவர் பகிர்ந்த அந்த வீடியோவில், சூப்பர் க்ளூ பசையுடனான கண்ணுடன் தோற்றமளித்தார். கண்ணில் இருந்து சூப்பர் க்ளூ பசையை நீக்க, ஒரு ஆயில்மெண்டை மருத்துவர்கள் பயன்படுத்தியதாகவும், ஆனால் அது தன்னைடைய பிரச்னையை போக்கவில்லை எனவும் அவர் வீடியோவில் தெரிவித்தார். அதாவது, அந்த ஆயில்மெண்டால் பசையை கண்ணில் இருந்து நீக்க இயலவில்லை. இதனை மருத்துவர்கள் அவரிடம் தெரிவித்து மாற்று வைத்தியம் குறித்தும் ஆலோசித்துள்ளனர். 


இதையடுத்து, அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்ற மருத்துவர்கள் இரும்பு உபகரணத்தை பயன்படுத்தி, அவர் கண்ணில் இருந்து பசை எடுத்துள்ளனர். இருப்பினும், அந்த பெண்ணிற்கு ஒரு கண்ணில் பார்வை பறிபோய்விட்டது. இந்த வீடியோ சுமார் 60 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. 


அந்த பெண், அந்த பசையை டிக்டாக் செய்வதற்கு பயன்படுத்தியதாகவும் தெரிகிறது. அதாவது, பசையை முடியில் பயன்படுத்தி அது முடியை எவ்வளவு திண்ணமாக்குகிறது என்பதை அவர் விவரித்துள்ளார். அந்த பசையே அவரின் பார்வை பறிபோக காரணமாக அமைந்தது துரதிருஷ்டவசமானது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


பல்வேறு வகையான தயாரிப்புகளை உருவாக்கும் பிராண்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஒரே மாதிரியான பேக்கேஜிங் மூலம் இரண்டு பிராண்டுகள் தொடங்குவதில் ஆச்சரியமில்லை. இந்த வீடியோவுக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில், ஒரு பயனர்,"நானும், இதை ஒரு முறை செய்தேன், ஆனால் நான் அதை போடப்போகும் தருணத்தில் அதை உணர்ந்தேன், கடைசி நொடியில் தப்பித்தேன்" என கருத்து தெரிவித்துள்ளார். மற்றொருவர்,"பல மக்கள் தற்செயலாக இதை எப்படி செய்கிறார்கள்? நான் சூப்பர் க்ளூவை வைத்திருக்கும் இடத்திற்கு என் கண் சொட்டு மருந்துகளை வைக்கவே மாட்டேன்" என்றார்.


மேலும் படிக்க | சூரியனுக்கு எவ்வளவு நெருக்கத்தில் செல்லலாம்? மர்மங்களை அவிழ்க்கும் Parker Solar Probe


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ