போதை மருந்து வாங்க அஸ்தியை திருடிய இளைஞன்! அதிர்ச்சியடைந்த போலீஸார்!
அமெரிக்காவில் ஒரு விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. உண்மையில் இங்கு ஒரு இளைஞன் தனது முன்னாள் காதலியின் தாயாரின் அஸ்தியைத் திருடிச் சென்றான்.
அமெரிக்காவில் ஒரு விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. உண்மையில் இங்கு ஒரு இளைஞன் தனது முன்னாள் காதலியின் தாயாரின் அஸ்தியைத் திருடிச் சென்றான். முன்னாள் காதலி, தனது தாயின் இறுதிச் சடங்குக்குப் பிறகு, அதனை வீட்டில் வைத்திருந்தாள். இதில், ஆச்சர்யம் என்னவென்றால் அந்த இளைஞனே, முன்னாள் காதலியை தொடர்பு கொண்டு, தாயின் அஸ்தியை திருடிச் சென்றதைத் தெரிவித்துள்ளார். போதைப்பொருளுக்கு ஈடாக அதனை விற்பதற்காக தனது முன்னாள் காதலியின் தாயின் அஸ்தியை திருடியதாக இளைஞன் தெரிவித்துள்ளார். இருப்பினும், அஸ்திக்கு பதிலாக பணம் அல்லது போதைப்பொருள் கிடைக்கும் என்று அவர் ஏன் நினைத்தார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
டெய்லி ஸ்டார் நாளிதழில் வெளியான செய்தியில், முன்னாள் காதலியின் தாயாரின் அஸ்தியை திருடியவரின் பெயர் ஜாக்சன் என கூறப்பட்டுள்ளது. அவருடைய வயது 19. ஜாக்சன் தனது முன்னாள் காதலிக்கு காலை 5:40 மணிக்கு போன் செய்து தனது தாயின் அஸ்தியை திருடிவிட்டதாக கூறினார். இந்த சம்பவம் அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் நடந்துள்ளது.
இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். அஸ்தியை இளைஞன் திருடிய சம்பவம் அம்பலமானதை அடுத்து, போலீசாரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது நீண்ட கால சர்வீஸில், முதன்முறையாக அஸ்தி திருடப்பட்ட சம்பவம் குறித்து கேள்விப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க | இரட்டைக் கொலை வழக்கை 30 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்த்து வைத்த ஒரு சொட்டு ரத்தம்!
இளைனர் ஜாக்சன் தனது முன்னாள் காதலியை அழைத்து பேசுகையில், அவள் ஒரு நண்பரின் வீட்டிற்குச் சென்றபோது, வீட்டிற்குள் நுழைந்து தனது தாயின் அஸ்தியை திருடிச் சென்றதாகக் கூறினார். இந்த வழக்கில் போலீசார் நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனது தோழியின் வீட்டில் இருந்து திரும்பி வந்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததால் அதிர்ச்சியடைந்ததாக, இளம் பெண் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இது தவிர அவரது வீட்டில் இருந்த பொருட்களும் சிதறிக் கிடந்தன. தனது தாயின் அஸ்தி சிறிதளவு தரையில் சிதறிக் கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ