அவர் மொபைலை மட்டும் திருடல... என் இதயத்தையும் தான் - ஒரு பெண்ணின் களவாணி காதல் கதை!
Bizarre Love Story: பிரேசில் நாட்டை சேர்ந்த பெண் தனது போனை திருடிய நபருடன் காதல் வயப்பட்ட வித்தியாசமான கதை நெட்டிசன்களை அதிகம் கவர்ந்த நிலையில் அது தற்போது வைரலாகியுள்ளது.
Bizarre Love Story: பிரேசிலில் ஒரு பெண் தன்னிடம் கொள்ளையடித்த ஒருவரைக் காதலித்துள்ளார். இப்போது அவர்களின் வினோதமான காதல் கதை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இணையத்தில் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியூஸ்களை குவித்துள்ள ட்விட்டர் வீடியோவில் இந்த ஜோடி தங்கள் காதல் கதையை விவரித்துள்ளது.
"நான் அவர் வசிக்கும் தெருவில் நடந்து கொண்டிருந்தேன். துரதிர்ஷ்டவசமாக, நான் அன்று ஏமாற்றப்பட்டேன்," என்று இமானுவேலா என அடையாளம் காணப்பட்ட பெண், பிரேசிலில் நடந்த ஒரு நிகழ்வில் தனது "முதல் டேட்டிங்கை" விவரிக்கும் போது கூறினார். மறுபுறம், அடையாளம் தெரியாத அந்த திருடன், அந்தப் பெண்ணின் புகைப்படத்தை திருடிய மொபைலில் பார்த்த பிறகு, அந்த பெண்ணின் மீது காதல்வயப்பட்டு விட்டதாக அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
"எனக்கென்று ஒரு பெண் இல்லாததால் நான் கடினமான சூழ்நிலையில் தனிமையில் இருந்தேன். அவளுடைய போட்டோவை போனில் பார்த்ததும், 'அழகு என்றால் அப்படி ஒரு அழகு, தினமும் அப்படி ஒரு அழகியைப் பார்க்க மாட்டாயா' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன், அதைத் திருடியதற்காக வருந்தினேன்" என்றார்.
மேலும் படிக்க | அதிபரை சிறை பிடித்த ராணுவ வீரர்கள்.. நைஜரில் பெரும் பரபரப்பு!
அப்போது நகைச்சுவையாக அந்த ஜோடியை நேர்காணல் செய்த நபர், "அப்படியானால் நீங்கள் அவளது போனையும் அதன் பிறகு இதயத்தையும் திருடிவிட்டீர்களா?" அதற்கு, திருடன், "சரியாக சொன்னீர்கள்" என்று பதிலளித்தான்
இருவரும் இப்போது இரண்டு ஆண்டுகளாக டேட்டிங் செய்து வருகின்றனர். இருப்பினும், அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் காதல் துணையாக ஒரு முன்னாள் திருடனை ஏற்றுக்கொள்வார்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இதற்கிடையில், அவர்களின் வினோதமான காதல் கதை ட்விட்டர் பயனர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுபோன்ற சாத்தியமில்லாத காதல் கதைகள் பிரேசிலில் இருந்து மட்டுமே உருவாகும் என்று சிலர் சுட்டிக் காட்டினாலும், மற்றவர்கள் கதையை மிகவும் அழகாக உள்ளதாகவும் கூறினர். காதல் எங்கும் எந்த சூழ்நிலையிலும் மலரும் என்றும் கூறினர்.
"அன்பால் எதையும் சாதிக்க முடியும்" என்று ஒரு பயனர் எழுதினார். "இது ஒரு நகைச்சுவை போல் தெரிகிறது, ஆனால் இது பிரேசிலில் மட்டுமே நடக்கும்" என மற்றொருவரும் கருத்து தெரிவித்தார். ட்விட்டர் வீடியோவுக்கு 2,200க்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளன.
மேலும் படிக்க | பையனாக வளர்ந்தவர்... தற்போது அழகி போட்டியில் பட்டத்தை வென்று சாதனை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ