புதுடெல்லி: விமானத்தில் பயணிப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள செய்தி. ராய்ட்டர்ஸ் செய்தி ஊடகம் அளித்த தகவலின் படி, விமானிகள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதால், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அதன் அனைத்து விமானங்களையும் ரத்து செய்ய உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பைலட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், விமான பயணிகள் பெரும் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பிரிட்டிஷ் ஏர்லைன் பைலட்ஸ் அசோசியேஷன் (BALPA) குழு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதால், பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாங்கள் வருத்தப்படுகிறோம். விமானிகளுடன் பேச்சுவாரத்தை நடத்தி வருகிறோம். விரைவில் பிரச்சனை தீர்க்கப்படும் என்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.


சம்பளக் கோரிக்கைகள் தொடர்பாக கடந்த சில மாதங்களாக நடந்து வரும் பிரச்சனை சமாளிக்க பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தொடர்ந்து பேச்சுவாரத்தை நடத்தி வருகிறது. ஆனால், பேச்சுவார்த்தையில் எந்த முடிவையும் இதுவரை எட்டவில்லை. விமானியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ஒரு நல்ல முடிவை எட்டுவோம் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் விமான நிறுவனம் தெளிவாகக் கூறியுள்ளது.


பிரிட்டிஷ் ஏர்வேஸின் ட்விட்டர் பக்கத்தில், விமானிகள் செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடலாம். இதுபோன்ற சூழ்நிலையில், அனைத்து விமானங்கள் ரத்துசெய்யப்படலாம் எனவும் பயணிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.