கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற உணவு திருவிழா கூட்டத்தில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வடக்கு பகுதியான சான் ஜோஸ் நகரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கில்ராய் நகரில் ஆண்டுதோறும் ‘பூண்டு பிரியர்கள்’ நடத்தும் உணவு திருவிழா அந்நாட்டின் மிகப்பெரிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.


அவ்வகையில், இந்த ஆண்டின் மூன்று நாள் திருவிழாவின் இறுதிநாளான நேற்று அங்கு ஏராளமான மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டிருந்தனர். இந்நிலையில், திருவிழா கூட்டத்தில் ஒருவர் திடீரென்று கண்மூடித்தனமாக மக்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டதும் அங்கிருந்தவர்கள் உயிர் பயத்தில் சிதறி அங்கும் இங்குமாக தலை தெறிக்க ஓடினர்.


இந்த எதிர்பாராத தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயங்களுடன் 12 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து அப்பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.