கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புதன்கிழமை நாடாளுமன்றத்தை கலைத்து அக்டோபர் 21-ஆம் தேதி கூட்டாட்சி தேர்தலை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 2015-ஆம் ஆண்டு கனடாவின் பிரதமராகப் பதவி ஏற்றார். அப்போது தனது அமைச்சகத்தில் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துவேன் என்று தெரிவித்தார். இந்நிலையில் அவரது அமைச்சகத்திலிருந்து இரண்டு பெண்களை நீக்கி இருப்பது அவருடைய அரசியல் செல்வாக்குக்கு ஏற்பட்ட சரிவாகப் பார்க்கப்பட்டது. மேலும் அவரது அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.


கனடாவில் பொதுத்தேர்தல் நெருங்கி வரும் தருவாயில் ஜஸ்டினின் இந்தச் செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியது. மேலும், நாடாளுமன்றத்தில் ஐஸ்டினுக்குப் போதிய பெரும்பான்மை இல்லாத நிலை நீடிப்பதாக ’A Nanos Research’ கருத்துக் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்நிலையில் கனடா நாளுமன்றம் கலைக்கப்படுவதாக ஜஸ்டின் ட்ரூடோ அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதற்கு கவர்னர் ஜெனரல் ஜூலியும் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் பொதுத் தேர்தல் நடைபெறும் தேதியையும் ஜஸ்டின் அறிவித்தார்.


இதுகுறித்து ஜஸ்டின் தெரிவிக்கையில்., “கனடாவில் பொதுத் தேர்தல் அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. நாங்கள் கடந்த 4 ஆண்டுகளில் நிறைய செய்திருக்கிறோம். எங்களுடைய பணி எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் என நம்புகிறோம். தேர்தலுக்கான பிரச்சாரம் விரைவில் தொடங்கவுள்ளது” என தெரிவித்துள்ளார்.


கனடாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது வரும் பொதுத் தேர்தலில் ஐஸ்டினுக்குப் போதிய ஆதரவு இல்லாததால் அவர் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது கடினம் என உள்நாட்டு ஊடக கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.