உலகம் முழுவதும், சமீப காலமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் உயிரிழந்து வருகின்றனர். அப்படி ஒரு சம்பவம்தான் அமெரிக்காவின் சிக்காகோ நகரில் நடந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட சிறுவன்!


அமெரிக்காவின் சிக்காகோ நகரில் அந்த ஐந்து வயது சிறுவன் அவனது பாட்டி வீட்டில் தங்கியிருந்துள்ளான். அவனுடன் அவனது குடும்பத்தினரும் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த அன்று, அந்த சிறுவனுடன் வீட்டில் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. சிறுவனை பார்த்துக்கொள்ளும் உறவினர் ஒருவர், புதன் கிழமை அதிகாலை சிறுவன் தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்துள்ளார். 


இரவு பார்ட்டிக்கு சென்று விட்டு வந்ததால் அவர் தனது கைத்துப்பாக்கியை அப்படியே வைத்துவிட்டு தூங்க சென்றிருக்கிறார். பின்னர், துப்பாக்கி சத்தமும் யாரோ கீழே விழும் ‘தட்’என்ற சத்தமும் கேட்டு எழுந்திருக்கிறார். அப்போதுதான் இவருக்கு வீட்டில் சிறுவன் இருந்த விஷயமும் அவன் துப்பாக்கியை எடுத்து சுட்டுக்கொண்டதும் தெரிய வந்துள்ளது. 


மேலும் படிக்க | அதி பயங்கர சர்மட் ஏவுகணையை நிலைநிறுத்திய ரஷ்யா... பீதியில் NATO நாடுகள்!


போலீஸார் விசாரணை:


சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதை அடுத்து, அவனை மருத்துவமனைக்கு அவனது உறவினர் அழைத்து சென்றுள்ளார். மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தான் இரவு முழுவதும் வெளியில் இருந்து விட்டு அதிகாலையில்தான் வீட்டிற்கு வந்ததாகவும் வீட்டில் யாரும் இல்லை என்று நினைத்து கைத்துப்பாக்கியை அப்படியே வைத்து விட்டு படுக்க சென்றதாகவும் கூறியுள்ளார். சிறுவனின் பாட்டி இல்லாத நேரத்தில் சிறுவனையும் அவனுடைய 17 வயது சகோதரியையும் பார்த்துக்கொள்வதாக அவ்வப்போது தான் அந்த இல்லத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  இவருக்கு 32 வயதாகிறது. 


நடவடிக்கை எடுக்கவில்லை..


கைத்துப்பாக்கியை பார்த்த சிறுவன் தன்னைத்தானே தெரியாமல் சுட்டுக்கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். கைத்துப்பாக்கியின் உரிமையாளரிடம் விசாரணை நடத்திய பிறகு அவர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்காமல் போலீஸார் விடுவித்துள்ளனர். இருப்பினும் இது உண்மையிலேயே விபத்து தானா என்ற சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள அவர்கள் சம்பவம் நடந்த வீட்டிற்கு அருகில் உள்ளவர்களிடம் இது குறித்த தகவல்களை சேகரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். 


மேலும் படிக்க | சிங்கப்பூரில் ஆட்சியைப் பிடித்த தமிழர் - யார் இவர்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ