BBC தொலைக்காட்சிக்கு சீனாவில் தடை.. காரணம் என்ன..!!!
![BBC தொலைக்காட்சிக்கு சீனாவில் தடை.. காரணம் என்ன..!!! BBC தொலைக்காட்சிக்கு சீனாவில் தடை.. காரணம் என்ன..!!!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2021/02/12/183481-xi-jimping-1.jpg?itok=_hC4UxLA)
சீன அதிபர் ஜி ஜின்பிங் (Xi Jinping) குறித்தும், கொரோனா வைரஸ் பரவலை சீனா கையாண்ட விதம் குறித்தும் ஆட்சேபனைக்கு உரிய விதத்தில் செய்திகளை வெளியிட்டதாக கூறி பிபிசி உலக் தொலைகாட்சி ஒளிபரப்புக்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் (Xi Jinping) குறித்தும், கொரோனா வைரஸ் பரவலை சீனா கையாண்ட விதம் குறித்தும் ஆட்சேபனைக்கு உரிய விதத்தில் செய்திகளை வெளியிட்டதாக கூறி பிபிசி உலக் தொலைகாட்சி ஒளிபரப்புக்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் நடைமுறையில் உள்ள ஒளிபரப்பு தொடர்பான அனைத்து விதிகளையும் பிபிசி மீறியதால், சீனாவின் ஒளிபரப்பு ஒழுங்குமுறை ஆணையம் பிபிசி ஒளிப்ரப்புக்கு தடை விதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
பிபிசி உலக செய்திகள் (BBC World News) தொலைக்காட்சியில், செய்திகள் உண்மைக்கு புறம்பானதாக (False Reports) இருப்பதோடு, சீனாவின் தேசியத்தை காயப்படுத்தும் வகையிலும், தேசிய ஒற்றுமையை பாதிக்கும் வகையிலும் உள்ளது என எனவும் சீனாவின் ஒளிபரப்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை நீக்குவது தொடர்பான எந்த ஒரு மனுவும், ஒரு வருடத்திற்கு ஏற்கப்படமாட்டாது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த பிப்ரவரி 4ம் தேதியன்று, சீனாவின் (China) அரசு தொலைக்காட்சியான CGTN முறையற்ற வகையில் உரிமம் பெற்றதாக கூறி, பிரிட்டன் தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அதன் உரிமத்தை ரத்து செய்தனர். பிபிசி மீதான தடை இதற்கான பழிவாங்கும் செயலாக இருக்கலாம் எனவும் கொரு கருத்து நிலவுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி (BBC) வெளியிட்டுள்ள அறிக்கையில், சீன அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை தொடர்பான முடிவு தங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்றும், சர்வதேச அளவில் உலக செய்திகளை வெளிப்படையாகவும், நடுநிலையாகவும், அச்சமன்றியும் வெளியிடுவதில் உலகின் மிக நம்பகமான சர்வதேச ஊடக ஒளிபரப்பாளராக பிபிசி (BBC) உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | கண்ணும் கருத்துமாக இல்லையென்றால் சீனா நம் உணவை பறித்துக்கொள்ளும்: Joe Biden
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR