சீனாவின் அன்யாங் நகர் தொழிற்சாலை தீ விபத்தில் 36 பேர் பலி
China Factory Fire Accident: சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள அன்யாங் நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன
அன்யாங்: சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள அன்யாங் நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சீனா தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில், உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள அன்யாங் நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகளை மேற்கோள் காட்டி அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தொழிற்சாலையில் பணியில் இருந்த இருவரை இன்னும் காணவில்லை. திங்கள்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டதாகவும், சம்பவம் குறித்த மற்ற விவரங்கள் எதுவும் இதுவரை பகிரப்படவில்லை என்றும் சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | ஃபீபா உலகக்கோப்பைக் கால்பந்து போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர்கள்
கைசிண்டா டிரேடிங் கோ., லிமிடெட் என்ற தொழிற்சாலையில் மாலை 4:22 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக மீட்புப் பணியாளர்களுக்கு தகவல் கிடைத்தது. "அலாரம் அடித்ததும், நகராட்சி தீயணைப்பு மீட்புப் பிரிவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு படைகளை அனுப்பினார்கள்" என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
தொழிற்சாலையில், நெருப்பு கொளுந்து விட்டு எரியும் காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது."பொது பாதுகாப்பு, அவசரகால நடவடிக்கை, நகராட்சி நிர்வாகம் மற்றும் மின் விநியோக பிரிவுகள் அவசர சிகிச்சை மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள ஒரே நேரத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்தன" என்று சீனாவின் செய்தி நிறுவனம் சின்ஹுவா தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | சண்டைக்கு பின் சமாதானம்: பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லை மீண்டும் திறக்கப்பட்டது
இந்த விபத்து மாலை நான்கரை மணியளவில் நடைபெற்றாலும், சீனாவின் உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், சிசிடிவி மேலும்.
தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றாலும், தீ விபத்து தொடர்பாக "குற்றம் புரிந்த சந்தேக நபர்களை" காவலில் எடுத்துள்ளதாகவும் சீன அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | கொரிய தீபகற்பத்தில் அதிகரிக்கும் பதற்றம்! மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவியது வட கொரியா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ