பெய்ஜிங்: சீனா மற்றும் வடகொரியா இடையே ரயில் மூலமான சரக்கு போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. வடகொரியாவுடனான ரயில் சரக்கு போக்குவரத்து வசதி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொற்றுநோய் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான ரயில் சரக்கு சேவை நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


இரு தரப்பின் நட்பு ரீதியான பேச்சு வார்த்தையின் விளைவு


இரு தரப்புக்கும் இடையிலான நட்புறவு பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சீனாவின் டான்டாங் (Dandong) மற்றும் வடகொரியாவின் சினுய்ஜு (Sinuiju) இடையேயான தொடர்பு மீண்டும் ஏற்பட்டதாக சீன (China) வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் (Zhao Lijian) தெரிவித்தார். தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் வரை சாதாரண வணிகம் மீட்டமைக்கப்படும் என்று ஜாவோ கூறினார். மற்ற எந்த விவரங்களையும் அவர் தெரிவிக்கவில்லை.


ALSO READ | வட கொரியாவில் வீடு வீடாகச் சென்று சோதனையிடும் அதிகாரிகள்: காரணம் என்ன?


கோவிட்-19 தொற்றைத் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது


ஏற்கனவே ஐநா மற்றும் அமெரிக்க பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ள வடகொரியா, கோவிட்-19 (Covid 19) தொற்றைத் தடுக்கவும், அதன் சுகாதார அமைப்பை அழுத்தமில்லாமல் வைத்திருக்கவும் நாட்டின் எல்லைகளை மூடியுள்ளது. கம்யூனிஸ்ட் நாடான சீனாவிலிருந்து மிகச் சிறிய தகவல்களே வெளி வருவதால், வட கொரியாவில் எத்தனை பேர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. பியோங்யாங்கின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களுக்கான தடை ஆவணங்களில் கையெழுத்திட்ட போதிலும், சீனா வட கொரியாவின் முக்கிய நட்பு நாடாகவும் பொருளாதார உதவிக்கான ஆதாரமாகவும் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.


வடகொரியா வலிமையை வெளிப்படுத்தியது


வட கொரியா (North Korea) திங்களன்று சந்தேகத்திற்கிடமான வகையில், இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை கடலில் செலுத்தியது. இதன் மூலம் இந்த மாதத்தில் வட கொரியா நான்காவது முறையாக ஆயுதங்களை ஏவி சோதனை செய்தது. 


அமெரிக்காவுடனான ராஜ்ஜீய பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டதற்கும், தொற்றுநோய் காரணமாக எல்லை மூடப்பட்டதற்கும் மத்தியில் தனது வலிமையை வெளிப்படுத்த வடகொரியா இந்த ஏவுதலை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


ALSO READ | Tsunami: சுனாமியால் பாதிக்கப்பட்ட டோங்கா! அணுக முடியாததால் அதிகரிக்கும் கவலைகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR