"அடுத்தடுத்த தலாய் லாமாக்கள் தேர்ந்தெடுக்கப்படும் செயல்முறையில் சீன அரசாங்கத்திற்கு எந்தப் பங்கும் இருக்கக்கூடாது" என்று பைடன் நிர்வாகம் கூறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"தலாய் லாமாவின் அடுத்தடுத்த செயல்பாட்டில் சீன அரசாங்கத்திற்கு எந்தப் பங்கும் இருக்கக்கூடாது என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறினார். "25 ஆண்டுகளுக்கு முன்னர் பஞ்சன் லாமாவிற்கு பிறகான தலாய் லாமாவை தேர்ந்தெடுப்பதில் பெய்ஜிங்கின் தலையீடு இருந்தது. பஞ்சன் லாமா ஒரு குழந்தையாக இருந்தபோது,​அவரை காணாமல் போக வைத்தது, ​அவருக்கு பதிலாக சீன மக்கள் குடியரசு (PRC) அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை மாற்ற முயற்சித்தது ஆகியவை மத சுதந்திரத்திற்கு எதிரான மூர்க்கத்தனமாக துஷ்பிரயோகம் ஆகும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.


அதிகரித்து வந்த சீன அடக்குமுறைக்கு மத்தியில் தலாய் லாமா (Dalai Lama) தனது ஆதரவாளர்களுடன் 1959 இல் இந்தியாவுக்கு தப்பி வந்தார். அப்போதிருந்து திபெத்திய ஆன்மீகத் தலைவர் தர்மசாலாவில் தங்கியுள்ளார்.


ALSO READ: மியான்மாரில் இரும்பு கரம் கொண்டு போராட்டத்தை ஒடுக்கும் ராணுவம்..!!!


1950 ஆம் ஆண்டில் இப்பகுதியில் மக்கள் விடுதலை இராணுவ (PLA) துருப்புக்கள் தலையிட்டதிலிருந்து திபெத்தில் மத சுதந்திரம் மற்றும் கலாச்சாரத்தை முடக்கி சீனா (China) அடக்கியாள்கிறது என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


பிப்ரவரி 13, 1913 அன்று, 13 வது தலாய் லாமா திபெத்திய சுதந்திரத்தை "சுதந்திர பிரகடனம்" அறிவிப்பின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தினார். அதன் பின்னர் திபெத்தியர்கள் அந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர். கடந்த மாதம், நாடுகடத்தப்பட்ட திபெத்தியர்கள் தங்கள் 108 வது சுதந்திர தினத்தை குறித்து எளிமையான கொண்டாட்டங்களை மேற்கொண்டனர்.


அடுத்த தலாய் லாமாவைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையில் சீன அதிகாரிகள் தலையிட்டால் அவர்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுவதற்கான ஒரு சட்டத்தில் டிரம்ப் நிர்வாகம் கையெழுத்திட்டிருந்தது.


அடுத்த தலாய் லாமாவை சீன அரசாங்கம் தன் விருப்பப்படி தேர்ந்தெடுக்கக்கூடும் என்ற கவலை பரவிய நிலையில், திபெத்திய கொள்கை மற்றும் ஆதரவு சட்டத்திற்கு அமெரிக்க (America) காங்கிரஸ் பெருமளவில் ஒப்புதல் அளித்தது.


அமெரிக்க பிரதிநிதிகள் சபை 392-22 என்ற பெரும்பான்மையுடன் மசோதாவை நிறைவேற்றியது. செனட்டும் இதை நிறைவேற்றியது.


புதிய சட்டத்தின்படி, "திபெத்திய பௌத்த மதத்தின் வருங்கால 15 வது தலாய் லாமாவை அடையாளம் கண்டு நியமிப்பதில் நேரடியாக தலையிடும் அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிக்கும்”.


ALSO READ:பாகிஸ்தானுக்கு இந்த விஷகியத்தில் மிகவும் ஆதரவாக மாறியது இந்தியா!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR