புதுடெல்லி: சீனா, பாகிஸ்தான் மற்றும் வடகொரியாவை சேர்ந்த சைபர் ஹேக்கர்கள், இந்தியாவின் அணுசக்தி மற்றும் பாதுகாப்பு உற்பத்தியுடன் தொடர்புடைய கணினிகளை ஹேக் செய்ய முயற்சிப்பதாக  உளவுத் துறை மேற்கொண்ட சைபர் அச்சுறுத்தல் புலனாய்வு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

56  செயலிகள் மூலம் தாக்குதல் 


இந்த ஆண்டு அக்டோபர் 1 முதல் அக்டோபர் 31 வரை, நாட்டின் முக்கியமான  துறைகளின் கணினிகளை ஹேக் செய்யும் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக மத்திய அரசு மற்றும் மாநிலங்களுக்கு அனுப்பிய அறிக்கையில் புலனாய்வுத் துறை கூறியுள்ளது. மொத்தம் 56 இணைய செயலிகள் மூலம் சைபர் ஹேக்கிங் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


சைபர் அச்சுறுத்தல்
உளவுத் துறை மேற்கொண்ட சைபர் அச்சுறுத்தல் புலனாய்வு அறிக்கையில், மாநில காவல்துறை, கூட்டுறவு வங்கிகள், துணை ராணுவப் படைகள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் அரசுத் துறைகள் மீது ஜேக்கார்கள் சைபர் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில். முக்கிய துறையின் கணிகளை ஒன்பது செயலிகள் மூலம், ஹேக் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் பிறகு பஞ்சாபில் 7, கேரளாவில் 5 வெப் அப்ளிகேஷன் மூலம் பெரும் ஹேக்கிங் முயற்சி நடந்தது.


ALSO READ | Xi Jinping ஒரு 'கொலையாளி' தான்; ஆனாலும் எனது நண்பர்: டொனால்ட் டிரம்ப்


இந்தியாவை கண்டு அஞ்சும் சீனா 


 ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணை  அமைப்பை இந்தியா பெறத் தொடங்கிய நிலையில், இந்தியாவின் ராணுவ பலம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அஞ்சும் சீனா பாதுகாப்பு தயார்நிலை குறித்த தகவல்களைப் பெற தொடர்ந்து முயற்சிக்கிறது.


ஹேக்கிங் முயற்சிகள்


கடந்த செப்டம்பர் மாதத்திலும், சீன (China) ஹேக்கர்கள் இந்தியாவின் பாதுகாப்புத் தயார் நிலை குறித்த தகவல்களைப் பெற நாட்டின் பாதுகாப்புத் துறையில் சைபர் தாக்குதல்களை நடத்துகின்றனர். ஹேக் செய்ய முயற்சித்த 40 கணினிகளின் தகவல்களை ஏஜென்சிகள் அரசாங்கத்துடன் பகிர்ந்து கொண்டன. இதனுடன், ஹேக்கிங் முயற்சிகள் மேற்கொள்ள உபயோகிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட இணைய செயலிகளை  உளவுத் துறை கண்டறிந்துள்ளன, 


செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 30 வரை சீன ஹேக்கர்களால் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தகவல் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹேக்கர்கள் ஊடுருவ முயன்ற 40 கணினிகளில் 11 ஜம்மு காஷ்மீர், 7 கர்நாடகா மற்றும் 6 உத்தரபிரதேசத்தில் உள்ளவை.


ALSO READ | கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை: மகனின் ‘₹3000 கோடியை’ குப்பையில் வீசிய தாய்..!!


ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளுடன் இந்தியா தனது போர் விமானங்கள் மற்றும் பிற ஆயுதங்களை எங்கு நிலைநிறுத்துகிறது என்பதைக் கண்டறிய சீனா முயற்சித்து வருகிறது. சீனாவைப் போலவே பாகிஸ்தானும் சைபர் ஹேக்கர்கள் மூலம் இந்தியாவை உளவு பார்க்கிறது. சீனாவின் சைபர் ஹேக்கர்கள் பாதுகாப்புத் துறையையும், நாட்டின் முக்கியமான துறைகளான மின்சாரம், வங்கிகள், மத்திய துணை ராணுவப் படைகள் மற்றும் காவல் துறையின் கணினிகளையும் ஹேக் செய்ய முயற்சிக்கின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR