இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசம் (Arunachal Pradesh) மீது சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. அந்த வகையில், சீனா, வார இறுதியில், இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீனா தனது மொழியில் புதிய பெயர்களை வைத்துள்ளது. இந்தியாவின் எல்லைப் பகுதியில் சீனா உரிமை கோருவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் அருணாசல பிரதேசத்தில் உள்ள சில பகுதிகளில் புவியியல் பெயர்களின் மற்றொரு பட்டியலை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களை தொடர்ந்து மறுப்பெயரிட்டு வரும் சீனா


சீன நாட்டின் சிவில் விவகார அமைச்சகம், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களை தொடர்ந்து மறுப்பெயரிட்டு வருகிறது. ஏற்கனவே மறுப்பெயரிட்டு 3 பட்டியல்களை வெளியிட்டது. முன்னதாக, 2017ம் ஆண்டில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஆறு இடங்களின் பெயர்களை மாற்றி முதல் பட்டியலை வெளியிட்டது. பின்னர், 2021ம் ஆண்டில் 15 இடங்களின் பெயர்களை மாற்றி இரண்டாவது பட்டியலை வெளியிட்டது. கடந்த 2023ம் ஆண்டில் 11 இடங்களுக்கான பெயர்களை மாற்றி மூன்றாவது பட்டியலை வெளியிட்டது. இந்நிலையில், 4வது பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. 


30 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியுள்ள சீனா


நேற்றைய நான்காவது பட்டியலில், இந்தியா - சீனா எல்லை கட்டுப்பாடு கோடு அருகில் உள்ள அருணாச்சலப் பிரதேச மாநிலத்துக்கு சொந்தமான 30 இடங்களின் பெயர்களை சீனா (China) மாற்றியுள்ளது. கிழக்கு அருணாச்சலில் உள்ள பகுதியை தங்களது ஆளுகைக்கு உட்பட்ட "ஸங்னங்" பகுதி என பெயரிட்டு அழைத்து வரும் சீனா 11 மாவட்டங்கள், 12 மலைகள், 4 ஆறுகள், 1 ஏரி, 1 நிலப்பகுதி உள்ளிட்ட 30 இடங்களுக்கு புதிய பெயர் சூட்டியுள்ளது. 


மேலும் படிக்க | இந்தியர்களின் வயிற்றில் பால் வார்க்கும் கனடா பிரதமர்! இனி வாடகை பிரச்சனை இருக்காது!


சீனாவின் நடவடிக்கையை பலமுறை கண்டித்துள்ள இந்தியா


அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களின் பெயரை மாற்றும் சீனாவின் நடவடிக்கையை பலமுறை கண்டித்துள்ள இந்தியா, அருணாச்சலப் பிரதேச மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று தொடர்ந்து வலியுறுத்தி, சீனாவின் செயலை நிராகரித்து வருகிறது. கடந்த மார்ச் 23ம் தேதி அன்று சீனா தொடர்பாக கருத்து தெரிவித்த, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், “அருணாசலபிரதேசத்தில் மூக்கை நுழைக்க நினைக்கும் சீனாவின் நடவடிக்கைகள் நகைப்புக்குரியது. அருணாச்சலப் பிரதேச மாநிலம் இந்தியாவின் இயற்கையான அங்கம்” என்று கூறினார்.


அருணாசல பிரதேசத்தை சீனா உரிமை கோருவது அபத்தமானது


அருணாசல பிரதேசத்தை தங்கள் பிராந்தியம் என தொடர்ந்து உரிமை கொண்டாடி வரும் சீனா, இந்தியத் தலைவா்கள் அம்மாநிலம் செல்வதற்கும் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அண்மையில், பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமா் மோடி ( PM Narendra Modi) அம்மாநிலத்துக்குச் சென்ற போதும், சீனா எதிா்ப்பு தெரிவித்து, தூதரக ரீதியில் கண்டனத்தைப் பதிவு செய்தது. இது குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் செய்தியாளா்கள் சனிக்கிழமை கேள்வி எழுப்பிய போது, ‘அருணாசல பிரதேசத்தை சீனா உரிமை கோருவது அபத்தமானது, கேலிக்குரியது. அம்மாநிலம் இந்தியாவின் இயற்கையான அங்கம்’ என்றாா்.


மேலும் படிக்க | ரத்தத்தை குடிக்கும் பெண்... அதுவும் தினமும் 1 லிட்டர்... இந்த பழக்கம் வந்தது எப்படி தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ