சீன கோடீஸ்வரர் ஜாக் மா பொதுமக்கள் பார்வையில் இருந்து நீண்ட காலமாக காணாமல் போயிருந்த நிலையில் அவர் நன்றாக இருக்கிறாரா என்ற கவலை பலருக்கு இருந்தது. இந்நிலையில் அவர் நலமாக உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அலிபாபா (Alibaba) குழும இணை நிறுவனரான ஜாக் மா, புதன்கிழமை 100 ஆசிரியர்களிடையே ஆன்லைன் கூட்டத்தில் உரையாற்றினார். அக்டோபருக்குப் பிறகு ஒரு பொது நிகழ்வில் அவர் காணப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. கிராமப்புற ஆசிரியர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் ஜாக் மாவால் நடத்தப்படுகின்றது. ஜாக் மா முன்னர் ஒரு ஆங்கில ஆசிரியராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் அவர் காணாமல் போனது குறித்து பரவி வந்த வதந்திகளும் அச்சங்களும் ஒரு முடிவுக்கு வந்துள்ளன. அவரது ஆன்லைன் காப்பீட்டு வணிகம் சீன ஆண்டி-டிரஸ்ட் கட்டுப்பாட்டாளரின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, அவர் காணாமல் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.




அவர் ஆன்லைனில் இந்த நிகழ்வில் கலந்துகொண்டது பற்றி முதலில் ஒரு உள்ளூர் பிளாக்கில் குறிப்பிடப்பட்டது. பின்னர் இது சர்வதேச செய்தி நிறுவனங்களால் உறுதிப்படுத்தப்பட்டது. ஃபிண்டெக் நிறுவனமான ஆண்ட் பைனான்சலின் திட்டமிடப்பட்டிருந்த IPO-வை சீன கட்டுப்பாட்டாளர்கள் நிறுத்தியதும், ஃபிண்டெக் விதிமுறைகளை வலுப்படுத்தியதும், அலிபாபா மீது நம்பிக்கை எதிர்ப்பு விசாரணையைத் தொடங்கியதும் ஜாக் மா (Jack Ma) பொது பார்வையிலிருந்து மறைந்ததற்கு காரணமாகப் பார்க்கப்படுகின்றன.


ஆசிரியர்களுடனான நிகழ்வில் உரையாடிய ஜாக் மா, இந்த நிகழ்வு வழக்கமாக தெற்கு ஹைனானின் சன்யா பிராந்தியத்தில் நடைபெறும் என்றும், ஆனால் COVID-19 தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டு ஆன்லைனில் நடத்தப்படுகிறது என்றும் கூறினார்.


ALSO READ:  Jack Ma Missing: Alibaba நிறுவனரை காணவில்லை, சீன சதியா? திடுக்கிடும் உண்மைகள்!!


2020 அக்டோபரின் பிற்பகுதியில் ஷாங்காயில் ஒரு உரையில் சீனாவின் ஒழுங்குமுறை செயல்முறைகளை ஜாக் மா பகிரங்கமாக விமர்சித்ததையடுத்து, அதிகாரிகளுடனான அவரது தொல்லைகள் தொடங்கின. இதன் பின்விளைவாக அலிபாபாவின் 37 பில்லியன் டாலர் IPO நிறுத்தப்பட்டது.


ஜெஜியாங்கின் மாகாண அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஜெஜியன் ஆன்லைனின் தியான்மு நியூஸ் முதலில் இதைப் பற்றி கூறியது. அதன் பிறகு சீன (China) கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான குளோபல் டைம்ஸ் இதை உறுதிப்படுத்தியது.


புதன்கிழமை கிராம ஆசிரியர் முன்முயற்சி நிகழ்வில் ஜாக் பங்கேற்றதை அலிபாபா குழு உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது. 50 விநாடிகள் கொண்ட வீடியோவில் முன்னாள் அலிபாபா நிர்வாகத் தலைவர் நேவி நீல நிற ஸ்வெட்டர் அணிந்திருப்பதைக் காண முடிகிறது. அவர் வெளியிடப்படாத ஒரு இடத்திலிருந்து தனது பார்வையாளர்களிடம் நேரடியாக பேசினார்.


ஜாக் மா சீனாவின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவர். ஐ.நா (United Nations) மற்றும் உலகளாவிய தொண்டு நடவடிக்கைகளுக்காக அவர் மேற்கொண்ட பணிகள் சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் உலகளாவிய பிம்பத்திற்கு ஒரு மென்மையான அம்சத்தை சேர்த்தன. 


ALSO READ: Jack Ma: மாயமான அலிபாபா நிறுவனர் ஜாக் மாவை சீனா அரசு என்ன செய்தது?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR