தடுப்பூசியைப் பெற விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தடுப்பூசியை இலவசமாக விநியோகிப்பதாக சீனா அறிவித்துள்ளது...!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனா அரசுக்கு சொந்தமான சினோஃபார்ம் உயர் படிப்புகளுக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு COVID-19 தடுப்பூசியை (Coronavirus Vaccine) இலவசமாக வழங்கி வருகிறது. சினோபார்ம் என்பது ஒரு குழு நிறுவனமாகும், இது தற்போது கொரோனா வைரஸின் 2 தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறது. 


வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் நிறுவனத்தின் வலைத்தளத்தையும் இந்த தடுப்பூசிக்கு விண்ணப்பிக்கும் சில மாணவர்களையும் மேற்கோள் காட்டி, சீனா நேஷனல் பயோடெக் குரூப் கம்பெனி (CNBG) இந்த நடவடிக்கையை சீனாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் மீதான மக்கள் நம்பிக்கையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறியுள்ளது.


தடுப்பூசிக்கான பதிவு தொடங்கியது


இந்த தடுப்பூசியைப் பெற மாணவர்கள் இணையதளத்தில் பதிவு செய்தால், அவர்களுக்கு தடுப்பூசி இலவசமாக விநியோகிப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வலைத்தளம் மூலம் திங்களன்று 4,81,613 பேர் தடுப்பூசி எடுத்துள்ளதாகவும், மேலும் 93,653 பேர் தடுப்பூசிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ALSO READ | Sputnik V-யை தொடர்ந்து 2-வது COVID-19 தடுப்பூசியை உருவாக்கிய ரஷ்யா...!


திங்களன்று இந்த தகவலைக் கொடுத்த பிறகு, வலைத்தளம் செவ்வாய்க்கிழமை குறைவாக இருந்தது. இதற்கு காரணம், இணையதளத்தில் பணிகள் (Under Maintenance) நடைபெற்று வருவது தான். இருப்பினும், இது குறித்து நிறுவனம் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.


5 தடுப்பூசிகளின் பணிகள் நடந்து வருகின்றன


சீனா ஜூலை மாதம் ஒரு தடுப்பூசி அவசரகால பயன்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கியது. இது அரசு நடத்தும் மருந்து நிறுவனமான சீனா நேஷனல் பார்மசூட்டிகல் குழுமம் மற்றும் அமெரிக்காவில் பட்டியலிடப்பட்ட சினோவாக் பயோடெக்கின் ஒரு பிரிவு உருவாக்கிய 3 சோதனை தடுப்பூசிகளை வழங்கியது. நான்காவது தடுப்பூசியை கேன்சினோ பயோலாஜிக்ஸ் உருவாக்கியுள்ளது, இது ஜூன் மாதத்தில் சீன இராணுவத்தால் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.


இது மட்டுமல்லாமல், அபுதாபியை தளமாகக் கொண்ட குரூப் 42 CNBG என்ற செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி வருகிறது, இது மருத்துவ பரிசோதனைகளின் மூன்றாம் கட்டத்தில் உள்ளது.