அண்டை நாடான சீனா, நமது நாட்டின் அனைத்து எல்லைகளிலும் பல வகைகளில் தொல்லை கொடுத்து வருகிறது. இந்தியா- சீனா இடையேயான 1962-ம் ஆண்டு யுத்தத்தின் போது கணிசமான பகுதிகளை ஆக்கிரமித்து அக்‌ஷாய் சின் என பெயரிட்டுக் கொண்டது. இதேபோல வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை தம்முடைய நிலப்பகுதி என்றும் அது தென் திபெத் என்றும் தொடர்ந்து சீனா அழைத்து வருகிறது. இதற்கு மத்திய அரசு தரப்பில் பலமுறை கண்டனம் தெரிவித்து வரும் போதிலும் சீனா தொடர்ந்து சீண்டி பார்க்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனா அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட வரைபடம்


அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் பகுதி, தைவான் மற்றும் சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதி ஆகிய அனைத்தும் சீனாவின் பகுதிகளாக இணைத்து  2023 ஆம் ஆண்டுக்கான "சீனா வரைபடத்தின்" பதிப்பை சீனா திங்கள் கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அருணாச்சல பிரதேசம் "எப்போதும் இருந்துள்ளது" என்றும் "எப்போதும்" நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் என்றும் இந்தியா பலமுறை கூறியுள்ளது.


ட்விட்டரில் பதிவில் வெளியிட்டுள்ள தகவல்


"சீனாவின் நிலையான வரைபடத்தின் 2023 பதிப்பு திங்களன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது மற்றும் இயற்கை வள அமைச்சகத்தால் வழங்கப்படும் நிலையான வரைபட சேவையின் இணையதளத்தில் தொடங்கப்பட்டது" என்று அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் ட்விட்டரில் ஒரு பதிவில் இதனை தெரிவித்துள்ளது. புதிய வரைபடம் குறித்து கூறுகையில் “இந்த வரைபடம் சீனா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளின் தேசிய எல்லைகள் வரைதல் முறையின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது என ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது. குளோபல் டைம்ஸ் காட்சிப்படுத்திய வரைபடத்திலும் தென் திபெத் என்று சீனா உரிமை கோரும் அருணாச்சல பிரதேசம் மற்றும் அக்சாய் சின் காட்டப்பட்டுள்ளது. 1962 போரில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் இவை.


மேலும் படிக்க | Reliance AGM தொடங்குவதற்கு முன்னரே ஏற்றம் காணும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்


அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி


"அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி" என்று சீனாவிடம் இந்தியா பலமுறை கூறியுள்ளது குறீப்பிடத்தக்கது. இந்திய நிலப் பகுதிகளை மட்டுமல்ல பல்வேறு நாடுகளின் எல்லைப் பகுதிகளையும் கூட சீனா தம்முடைய பிரதேசம் என இந்த வரைபடத்தில் உரிமை கோரி இருக்கிறது.  தைவான் தீவு மற்றும் தென் சீனக் கடலின் பெரும்பகுதியைக் கோரும் ஒன்பது-கோடு கோடு ஆகியவற்றின் மீதான சீனாவின் உரிமைகோரல்களையும் வரைபடம் உள்ளடக்கியது.


இந்தியா- சீனா இடையே பேச்சுவார்த்தைகள்


இந்தியாவின் லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கு மோதல், பூட்டான் டோக்லாம் மோதல்களை தொடர்ந்து இந்தியா- சீனா இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இருதரப்பும் இடையேயான பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.


பிரதமர் மோடி -  சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு


தென்னாப்பிரிக்கா ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், சில நாட்களுக்கு முன், பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேசிய போது, எல்லைப் பகுதியில் அமைதி, நிலைத்தன்மையை இருதரப்பும் உறுதி செய்ய வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அருணாச்சல பிரதேசத்துக்கு உரிமை கொண்டாடி புதிய வரைபடம் வெளியிட்டு சீனா மீண்டும் சீண்டிப் பார்க்கிறது.


மேலும் படிக்க | சீன எல்லையை தொட உள்ள இந்திய ரயில்வே... மத்திய அரசின் ₹1.20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ