அமெரிக்காவின் போர் விமானம் போரில் எதிரி நாட்டு விமானங்களை வீழ்த்தும் திறமை வாய்ந்தவை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவின் வாஷிங்டனில் அமைந்துள்ளது ஒகனோகன் நகரின் வான்வெளியில் கடந்த வியாழக்கிழமை
கடற்படை போர் விமானம் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது.


அப்போது திடீரென அந்த விமானம் தலைகீழாக பறந்து சாகசம் செய்தது. விமானத்தில் இருந்து வெளிப்பட்ட புகையில் ஆணுறுப்பின் படம் போல் வானில் தெரிந்தது. இதுதொடர்பான புகைப்படங்கள் அங்கிருந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதில் வைரலாக பரவியது.


இதுகுறித்து அறிந்த அமெரிக்க கடற்படை, தனது போர் விமானியின் செயல்பாட்டுக்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.


இதுதொடர்பாக கடற்படையின் செய்தி தொடர்பாளர் கூறுயபோது, போர் விமானியின் பொறுப்பற்ற செயலுக்கு அமெரிக்க கடற்படை மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.