கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பொதுமக்கள் 234 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து அந்த நாட்டின் செஞ்சிலுவை சங்கத் தலைவர் சீஸர் உருயினா கூறியதாவது:-


தென்மேற்கு கொலம்பியாவின் பல பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அத்துடன், வீடுகள், பாலம், வாகனம், மரம் உள்ளிட்டவை நீரில் அடித்துச் செல்லப்பட்டன.


பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரையில் 206 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சுமாராக 202 பேர் காயமடைந்தும், 220 பேரைக் காணவில்லை. மலைப்பாங்கான பகுதிகளில் பாறைகள் உருண்டு உயிரிழப்பையும் பலத்த சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளன. 


தென்மேற்கு கொலம்பியாவை ஒட்டியுள்ள 17 இடங்கள் இந்த தொடர் மழையால் பலத்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளன என்றார்.


வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட கொலம்பியா அதிபர் ஜுவான் மேனுவல் சான்டோஸ், உயரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன் மீட்புப் பணிகளை துரித கதியில் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.