ஒரே கதை மூலம் புகழ்ச்சியின் உச்சிக்கு சென்ற சாதாரன மனிதன்!
Cartoon கதாபாத்திரம் போல் வாழ்ந்து வரும் கனெக்டிகட்-ன் வாழ்க்கை வரலாறு Reddit தளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது!
Cartoon கதாபாத்திரம் போல் வாழ்ந்து வரும் கனெக்டிகட்-ன் வாழ்க்கை வரலாறு Reddit தளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது!
Reddit என்பது பிரபல வலைப்பதிவு ஊடகம். இந்த ஊடகத்தில் பதிவு செய்யப்பட்ட நபர்கள் புகைப்படம், கதைகள், வீடியோ போன்ற விஷயங்களை பதிவு செய்வர். இந்த பதிவுகள் மற்ற உறுப்பினர்களால் மதிப்படப்பட்டு பிரபலப் படுத்தப்படும்.
அந்த வகையில் ஐக்கிய நாட்டின் கனெக்டிகட் பகுதியை சேர்ந்தவர் வாழ்க்கை வரலாறு தற்போது இந்த Reddit தளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 26 வயதாகும் ஜெப்பரி கெண்டல் என்பவர் தனது கதை குறித்து பகிர்ந்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தன் வீட்டில் தாயாருக்கு உதவியாக இருந்த இவர், பருமனாக இருந்தார் என்ற காரணத்தால் காதல் தோல்விக்கு ஆளாக்கப்பட்டார். இந்த காதல் தோல்வி காரணமாக வீட்டில் சோர்ந்துப்போன இவரை அவரது நண்பர் உடற்பயிற்சி கூடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் தன் உடலை கட்டுடலாக மாற்றி இவர் அந்த புகைப்படங்களையும், தனது கதையினையும் Reddit பக்கத்தில் பகிர்ந்தார். இந்த கதையினை படித்த அனைவரும் அவரை பாராட்டி பிரபல கார்ட்டூன் கதாப்பாத்திருத்துடன் ஒப்பிட்டுள்ளனர்.
இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்த இவர், தனது கடந்த கால காயங்களை மறந்து தன்னை ஒரு கலைஞனாகவே கருதி வருகின்றார். இந்த புகழ்ச்சியால் தனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளதாக அவர் என்னி வருகின்றார். இதன் வெளிப்பாடாக தனது இஸ்டாகிராம் பக்கத்தினில் தன்னை குறித்து கலைஞர், நடிகர் என குறிப்பிட்டுக்கொண்டுள்ளார்.
இவரது கதைக்கு கிடைத்த மக்களின் பாராட்டு இவரின் வாழ்க்கையினை மாற்றியுள்ளது என்றால் சந்தேகம் இல்லை.