கொரோனா வைரஸ் பாதிப்பு: சீனாவில் நாய், பூனை இறைச்சிக்கு தடை விதிப்பு!
கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து, சீனாவில் நாய் மற்றும் பூனை இறைச்சி சாப்பிட தடை விதிக்கபட்டுள்ளது!!
கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து, சீனாவில் நாய் மற்றும் பூனை இறைச்சி சாப்பிட தடை விதிக்கபட்டுள்ளது!!
சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இப்போது உலகளாவிய தொற்றுநோயின் வடிவத்தை எடுத்துள்ளது. பலரை காவு வாங்கியுள்ள இந்த கொரோனோ வைரஸை உலக சுகாதார நிறுவனம் இன்னும் ஒரு தொற்றுநோயாக அறிவிக்கவில்லை என்றாலும், நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது.
இந்தியாவுக்கு வருகை தந்த பின்னர் அமெரிக்கா சென்ற அதிபர் டொனால்ட் டிரம்ப் முதலில் கொரோனா குறித்து அவசர கூட்டத்தை நடத்தினார். இந்த வைரஸ் இப்போது உலகில் உள்ள 7 கண்டங்களில் 6 ஐ எட்டியுள்ளது, இதுவரை 2802 பேர் உயிர் இழந்துள்ளனர். கொரோனாவின் அழிவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றனர்.
சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக மேலும் 29 பேர் இறந்ததால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,744 ஆக அதிகரித்துள்ளது. ஜனவரி 29 க்குப் பிறகு ஒரே நாளில் இவ்வளவு பேர் வைரஸ் காரணமாக இறந்துள்ளது என்பது இதுவே முதல் தடவையாகும் என தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சீனாவின் சென்ஜென் (Shenzhen) நகரில் நாய் மற்றும் பூனை இறைச்சி சாப்பிட தடை விதிக்க வேண்டும் என விஞ்ஞானிகள் அரசுக்கு பரிந்துரைத்ததையடுத்து, சீனா அரசும் இதற்கு தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் விலங்குகளிடம் இருந்தே மனிதர்களுக்கு பரவுவதாக விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர். இதனால் வூஹான் நகரில் வவ்வால், பாம்பு, பூனை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வூஹானை விட சென்ஜென் பெரிய நகரம் என்பதால் கொரோனா வைரஸ் வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
இதனால் நாய் மற்றும் பூனை இறைச்சிகள் விற்பனைக்கும், அவற்றை உண்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என தெற்கு சீன தொழிற்நுட்ப மையம், சீன அரசுக்கு பரிந்துரைத்தது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர். தற்போது சீனாவில் பன்றி இறைச்சி, கோழி, மாட்டிறைச்சி, முயல், மீன், கடல்உணவுகள் உள்ளிட்ட 9 இறைச்சி வகைகள் மட்டுமே உண்ண அரசு அனுமதி அளித்துள்ளது.