டோக்கியோ: டோக்கியோ 2020 ஒலிம்பிக்கிற்கான ஒப்பந்தங்களின் ஏலத்தில் மோசடி செய்ததாக நாட்டின் விளம்பர நிறுவனமான டென்சு குரூப் மற்றும் ஐந்து நிறுவனங்கள் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து ஜப்பானில் ஊழல் புகார் தொடர்பான விவாதங்கள் ஏற்பட்டுள்ளன. ஜப்பானின் ஊழல் எதிர்ப்பு கட்டுப்பாட்டாளர்கள், நிறுவனங்கள் மற்றும் பெயர்கள் வெளியிடப்படாத ஏழு நபர்களுக்கு எதிராக கிரிமினல் புகார்களை பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடத்தும் வாய்ப்பை ஜப்பான் பெற்றிருந்தது. 2021 இல் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளின் திட்டமிடல் மற்றும் ஸ்பான்சர்ஷிப்பில் ஊழல் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த பல மாத விசாரணைகளுக்குப் பிறகு இந்த புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  


பொதுவாக, உலக நாடுகள் பலவற்றுடன் ஒப்பிடும்போது, ஜப்பானில் ஊழல் இல்லை என்றே சொல்லலாம். டோக்கியோவை தளமாகக் கொண்ட Dentsu ஜப்பானின் மிகப்பெரிய விளம்பர நிறுவனமாகும்.


இந்த நிறுவனம், ஊழல் புகார் தொடர்பாக தனது நிலைப்பாட்டை ஒரு அறிக்கையில் தெளிவுபடுத்தியது. "நிலைமையை தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். வணிக பங்காளிகள், பங்குதாரர்கள் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினருக்கு ஏற்பட்ட சிரமங்கள் மர்றும் இடையூறுக்கு மன்னிப்பு கேட்கிறோம்" என்று அந்த அறிக்கை கூறுகிறது.


டோக்கியோ 2020 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளின் சோதனை நிகழ்வுகளுக்கான ஏலம் தொடர்பாக, "ஆண்டிமோனோபோலி சட்டத்தை மீறியதாகக் கூறப்படும் குற்றத்திற்காக, இப்போது அதன் துணை நிறுவனங்களில் பணிபுரியும் குழுவின் முன்னாள் ஊழியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது" என்று நிறுவனம் மேலும் கூறியது. 


மேலும் படிக்க | IND vs AUS 3rd Test: இந்தூரில் தெறிக்க விட காத்திருக்கும் இந்திய அணி... முக்கிய தகவல்கள் இதோ!


குற்றம் சாட்டப்பட்ட ஆறு நிறுவனங்களில் ஒன்றான ஹகுஹோடோ டிஒய் ஹோல்டிங்ஸ், அதன் துணை நிறுவனமான ஹகுஹோடோ டிஒய் மீடியா பார்ட்னர்ஸ் ஒரு ஊழியர் "டோக்கியோ மாவட்ட அரசு வக்கீல் அலுவலகம் மூலம் கமிஷன் கொண்டு வந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்" என்றார்.


"நாங்களும் இந்த சூழ்நிலையை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். முழு ஹகுஹோடோ DY குழுவும் முழுமையான இணக்கத்திற்கும் சமூகத்தின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கும் உறுதிபூண்டுள்ளது,” என்று ஹகுஹோடோ டிஒய் ஹோல்டிங்ஸ் தெளிவுபடுத்தியது.
 
ஜப்பான் ஃபேர் டிரேட் கமிஷன் (FTC) Dentsu, Hakuhodo DY Holdings மற்றும் மற்ற நான்கு விளம்பர நிறுவனங்களுக்கு எதிராக புகார்களை பதிவு செய்த பின்னர் இந்த விளக்கங்கள் வெளிவந்துள்ளன.


"இது ஒரு தீங்கிழைக்கும் மற்றும் தீவிரமான வழக்கு என்று நாங்கள் தீர்மானித்தோம், இது மக்களின் வாழ்க்கையில் பரந்த தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று FTC இன் புலனாய்வாளர் கோ ஒகுமுரா தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது..


கடந்த ஆண்டு, டோக்கியோ 2020 ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் முன்னாள் உறுப்பினரும், டென்சுவின் முன்னாள் நிர்வாகியுமான ஹருயுகி தகாஹஷி, ஒலிம்பிக் ஸ்பான்சர்களிடமிருந்து $380,000 லஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். 


மேலும் படிக்க | IND vs AUS: இன்றைய போட்டியில் கேஎல் ராகுலுக்கு பதில் இவருக்கு வாய்ப்பு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ